இளம் வயதினரில் வகை 2 நீரிழிவு நோயின் அதிகரிப்பு: காரணங்கள், அபாயங்கள் மற்றும் தீர்வுகள்

முன்பு பெரும்பாலும் பெரியவர்களை பாதிக்கும் நோயாகக் கருதப்பட்ட வகை 2 நீரிழிவு நோய், இப்போது இளம் வயதினருக்கும் அதிகமாக காணப்படுகிறது. இது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள, அதன் காரணங்கள், அறிகுறிகள், அதனால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் தடுப்பு முறைகளை தெரிந்துகொள்வது முக்கியம். இந்த பதிவில், இளம் வயதினரில் வகை 2 நீரிழிவு நோய் அதிகரிக்கக் காரணங்கள் என்ன, அதன் தாக்கத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பதைக் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

இளம் வயதினரில் வகை 2 நீரிழிவு நோயின் அதிகரிப்பு: காரணங்கள், அபாயங்கள் மற்றும் தீர்வுகள்

வகை 2 நீரிழிவு நோய் என்றால் என்ன?

வகை 2 நீரிழிவு நோய் என்பது நமது உடல் இன்சுலின் செயல்பாட்டுக்கு எதிராக செயல்படுவது அல்லது போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பது காரணமாக ஏற்படும் ஒரு நிலை. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகி விடும். அதனை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்தாமல் விட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் உருவாகலாம். முன்பு பெரும்பாலும் 45-55 வயதிற்கு பிறகு பெரியவர்களில் காணப்பட்ட இந்த நோய், இப்போது இளம் வயதினரையும் அதிகமாக பாதித்து வருகிறது.

குழந்தைகள் மற்றும் இளம்வயதினருக்கு வகை 2 நீரிழிவு நோய் ஏன் அதிகமாகி வருகிறது? 

இன்றைய இளைஞர்களில் வகை 2 நீரிழிவு நோய் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன: 

  • துரித உணவுகள், அதிக சர்க்கரை உள்ள பானங்கள் மற்றும் குறைவான சத்துக்கள் கொண்ட அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கிறது.
  • கைபேசி, கணினி, மடிக்கணினி மற்றும் வீடியோ கேம்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், உடல் இயக்கம் குறைந்து, அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கிறது.
  • பெற்றோர் அல்லது குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் இருந்தால், குறிப்பாக தவறான வாழ்க்கை மற்றும் உணவு முறையை மேற்கொண்டால், இளம் வயதிலேயே சர்க்கரை நோய் உருவாக்கும் அபாயம் ஏற்படுகிறது. 
  • சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பது, இன்சுலின் செயல்பாட்டை பாதித்து, சர்க்கரை நோயை ஏற்படுத்தும். 

இளம் வயதில் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகள்

வயது குறைவாக இருந்தாலும், வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும்போது சில முக்கிய அறிகுறிகளை காணலாம். இதை வேகமாக கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவது அவசியம். இளம் குழந்தைகள் மற்றும் அணைத்து வயதினரிலும் காணப்படும் பொதுவான அறிகுறிகள் இதோ: 

  • அதிகமாகத் தாகம் எடுப்பது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது 
  • எப்போதும் சோர்வான உணர்வு (Persistent Fatigue)
  • எதற்கும் காரணமில்லாமல் உடல் எடை குறைதல் 
  • தெளிவற்ற பார்வை (Blurry Vision) 
  • சாதாரணமாக உணவு உட்கொண்டாலும் கூட அடிக்கடி ஏற்படும் பசி உணர்வு 

இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகள் மேற்கொள்வது மிகவும் முக்கியம். முதற்கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நீரிழிவு நோயின் தீவிரத்தன்மையை குறைக்கலாம்.

இளம் வயதினருக்கு வகை 2 நீரிழிவு ஏற்படுத்தும் பிரச்சனைகள் 

  • சர்க்கரை நோய் நீண்ட காலம் நிர்வகிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். 
  • உயர் இரத்த சர்க்கரை அளவு நரம்புகளை பாதித்து, தசைகளில் சோர்வு, சிலிர்ப்பு, வலி அல்லது உணர்வில்லாமல் போவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 
  • சர்க்கரை நோய் சிறுநீரகங்களை பாதித்து, சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாளடைவில் சிறுநீரக செயலிழப்பிற்கும் (Kidney Failure) வழிவகுக்கலாம். 
  • சர்க்கரை நோயால் கண்கள் பாதிப்பதன் மூலம் பார்வை மங்குதல், நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) ஏற்படலாம், இது தீவிரமாக இருந்தால் கண் பார்வையை இழக்கும் நிலைக்கும் செல்லலாம். 

வகை 2 நீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி?

இதனைத் தடுக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் முக்கியம். இங்கே சில வழிமுறைகளைக் காணலாம்:

  • தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். வெளியில் விளையாடுதல், விளையாட்டு செயல்பாடுகளில் ஈடுபடுதல், அல்லது நடைபயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உருவாக்க உதவும். 
  • தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், முழுமையான தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த புரத உணவுகளை சேர்க்க வேண்டும்.
  • அதிக சர்க்கரை உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் உண்பதை கட்டுப்படுத்த வேண்டும். 
  • டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.
  • உடல் எடை, இரத்த சர்க்கரை மற்றும் பொதுவான உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்க பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம். 

சிறிய வயதிலேயே சரியான உணவு, உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அளிப்பது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உதவும். 

இளம் வயதினருக்கு வகை 2 நீரிழிவு நோயை எப்படி நிர்வகிக்கலாம்?

  • மருத்துவர் உதவியுடன் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் உணவு திட்டம் அமைக்கலாம்.
  • விளையாடுதல், நடனம், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற உடல் இயக்கங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
  • சில குழந்தைகளுக்கு மருந்துகள் அல்லது இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம், அவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சிறு வதில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் மன அழுத்தம் ஏற்படலாம், ஆதலால் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவது முக்கியம்.

இறுதிச்சுருக்கம்

இளம் வயதில் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், அதை வராமல் தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மற்றும் சரியான மருத்துவ பராமரிப்பு மூலம் நீங்கள் இதைக் கட்டுப்படுத்தலாம். 

ஈரோடு டயாபடீஸ் பௌண்டேஷன் மற்றும் MMCHஇல், நாங்கள் குழந்தைகளுக்கு சரியான உணவுத் திட்டம், உடற்பயிற்சி வழிகாட்டுதல், மற்றும் மனநல ஆதரவு வழங்குகிறோம். சர்க்கரை நோயைத் தடுப்பதற்கும், நீண்ட கால பாதிப்புகளை குறைப்பதற்கும் உதவுகிறோம். நீங்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்பினால், இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*