கிட்னி நலனுக்கான சிறந்த உணவுகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள்

நம் உடலில் பல முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் உறுப்புகளாக கிட்னிகள் (சிறுநீரகங்கள்) உள்ளன. அவை கழிவுகளை வடிகட்டுதல், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் தசைகளுக்கு தேவையான முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வது போன்ற பல வேலைகளைச் செய்கின்றன. கிட்னிகள் ஆரோக்கியமாக இருக்க, நாம் உண்ணும் உணவும், வாழ்கை முறையும் பெரும் பங்கு வகிக்கின்றன. சரியான வாழ்கை முறை மற்றும் உணவின் வழியாக கிட்னி ஆரோக்கியத்தை பாதுகாத்து, நீண்ட நாட்கள் நலமாக வாழலாம். இந்த வலைப்பதிவில் கிட்னி நலனுக்கான சிறந்த உணவுகள், சிறுநீரகங்களை பராமரிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள், பொது நம்பிக்கைகள் மற்றும் உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

கிட்னிகளின் நலனுக்கான சில சிறந்த உணவுகள்

  • பூக்கோசு (Cauliflower) & முட்டைக்கோசு (Cabbage)

இவை கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. மலச்சிக்கலைக் குறைக்கவும், வீக்கத்தை தடுக்கவும் உதவுகின்றன.

  • ஆப்பிள் மற்றும் பெர்ரிகள் (ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, கிரான்பெரி)

இந்த பழங்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. அவை கிட்னி செல்லுகளுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகின்றன.

  • பூண்டு மற்றும் வெங்காயம்

இந்த உணவுகள் உடலில் வீக்கத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது கிட்னி நலத்திற்கு முக்கியமானது.

  • சிவப்பு குடைமிளகாய்

வைட்டமின் A மற்றும் C அதிகமாகவும், பொட்டாசியம் குறைவாகவும் உள்ளதால், ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

  • மீன் வகைகள் (சால்மன், சூரை மீன், கானாங்கெளுத்தி மீன்)

இவை ஓமேகா-3 கொழுப்பு அமிலங்களால் நிரம்பியவை. இது உடல் வீக்கம் குறைத்து, இதயம் மற்றும் கிட்னிக்கு நல்லது செய்யும்.

  • ஆலிவ் எண்ணெய்

அளவோடு சமைக்கும்போது ஆலிவ் எண்ணெய் மிகவும் நல்லது.

  • எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் – சாலட் அல்லது குளிரான உணவுகளுக்கு சிறந்தது.
  • ஆலிவ் போமேஸ்(olive pomace)எண்ணெய் – லேசான சமையலுக்கு நல்ல தேர்வு.

இது மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தையும் பேணுகிறது.

  • எலுமிச்சை கலந்த நீர்

இது ஒரு இயற்கையான   உடல் சுத்தீகரிப்பு (டீடாக்ஸ்/detox) பானம். சிறுநீரக கற்களை தடுக்கவும், நீர் சீரான அளவில் இருக்கும் வகையில் உடலை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

கிட்னி நலத்துக்கான வாழ்க்கை முறை மாற்றங்கள்

  • போதுமான நீர் குடிக்கவும் – தினமும் குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்.
  • நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யவும் – வழக்கமான உடற்பயிற்சி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கிட்னியின் வேலை திறனை மேம்படுத்தும்.
  • உப்பின் அளவை குறைக்கவும் – பதப்படுத்தப்பட்ட அல்லது துரித உணவுகளில் அதிக உப்பு இருப்பதால், அவற்றை குறைத்து உண்ண வேண்டும்.
  • இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும் – ஏனெனில் உயர் சர்க்கரையுடனும், உயர் இரத்த அழுத்தத்துடனும் கிட்னி பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்கவும் – இவை இரண்டும் கிட்னிக்கு அதிக வேலை தரும் மற்றும் நீண்டகால பாதிப்புகளுக்கும் காரணமாகலாம்.

சில பொதுவாக நம்பப்படும் பொய்யான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்

  1. பொய்யான நம்பிக்கை: அதிகமாக தண்ணீர் குடிப்பது கிட்னியை விரைவாக சுத்தம் செய்யும்.

உண்மை: நீர் குடிப்பது முக்கியம் தான். ஆனால் மிக அதிகமாக குடித்தாலும், கிட்னி தன்னிச்சையாக செய்கிற இயற்கை சுத்திகரிப்பு வேகமாகாது.

  1. பொய்யான நம்பிக்கை: சிறுநீரக நோய்கள் வயதானவர்களுக்கு மட்டுமே வரும்.

உண்மை: வயது காரணமாக மட்டும் கிட்னி பாதிப்பு ஏற்படாது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தவறான உணவுமுறை பழக்கம் இருந்தால் இளம் வயதிலேயே கூட ஏற்படலாம்.

  1. பொய்யான நம்பிக்கை: கிட்னி பாதிக்கப்பட்டால் உடனே வலி வரும்.

உண்மை: பெரும்பாலான சிறுநீரக நோய்கள் அறிகுறிகள் இல்லாமல் மெதுவாக உருவாகின்றன. வலி இல்லாமல் கடைசிக்கட்டத்தில் தான் தெரியக்கூடும். அதனால் தான் வழக்கமான பரிசோதனைகள் முக்கியம்.

முடிவுரை

கிட்னியின் ஆரோக்கியம் உங்கள் உணவியல் மற்றும் வாழ்க்கைமுறைத் தேர்வுகளைப் பொறுத்தே உள்ளது. சரியான உணவுகளை தேர்வு செய்வதும், போதுமான நீர் குடிப்பதும், உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்ப்பதும் உங்கள் சிறுநீரகங்களை நீடித்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும். பொய்யான நம்பிக்கைகளை தவிர்த்து, உண்மையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துங்கள். இன்றே சிறிய மாற்றங்களைச் செய்தால், நாளை பெரும் நலனை பெறலாம்!

ஈரோடு டயாபடீஸ் பௌண்டேஷன் மற்றும் MMCH இணைந்து, சிறுநீரக நலத்திற்கும் சர்க்கரை நோய்க்குமான தவறான நம்பிக்கைகளை மாற்றவும், சரியான மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும், சிகிச்சைகளைப் பெறவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கிட்னி பாதிப்பு வர வாய்ப்பு அதிகம் என்பதால், அதற்கான உணவுமுறை மற்றும் பராமரிப்பு குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*