சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?நன்மைகளும் அதன் ஊட்டச்சத்துக்களும்

முட்டைகளை உணவில் சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், சர்க்கரை நோயாளிகள், முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவுக்கு இடையிலான ஊட்டச்சத்து வேறுபாடுகள் மற்றும் அவை இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.சர்க்கரை நோய் உடலின் எல்டிஎல்-LDL (கெட்ட கொழுப்பு) மற்றும் எச்டிஎல்-HDL (நல்ல கொழுப்பு) கொழுப்பு சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில் முட்டை சாப்பிடுவது, உடலில் கொழுப்புச் சத்தை ++அதிகரிக்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். இந்த வலைப்பதிவில் சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? என்பதை அறியலாம்.

சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? நன்மைகளும் அதன் ஊட்டச்சத்துக்களும்

வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு

முட்டையின் வெள்ளை பகுதி, அல்லது ஆல்புமன், புரதம் நிறைந்தது. மேலும் இதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இல்லை. இது சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிறந்த தேர்வாக அமைகிறது. இது திசுக்களை பழுதுபார்க்க மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் வழங்குகிறது.

மறுபுறம், மஞ்சள் கருவில் முட்டையின் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால், வைட்டமின் டி, கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. மஞ்சள் கருவில் சில புரதங்கள் இருந்தாலும், அதில் சிறிய அளவு கிளைகோஜன் வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளது.

முட்டையின் ஊட்டச்சத்து உள்ளடக்கம்

முட்டை 100 கிராமுக்கு தோராயமாக பின்வரும் ஊட்டச்சத்து மதிப்புகளைக் கொண்டுள்ளது: 

1. முட்டையின் வெள்ளைக்கரு

  • கலோரிகள்: 52 கிலோகலோரிகள்
  • புரதம்: 11 கிராம்
  • கொழுப்பு: 0 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 1.1 கிராம்
  • கொலஸ்ட்ரால்: 0 மி.கி

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் சிறிய அளவில் உள்ளது.

2.முட்டையின் மஞ்சள் கரு

ஒரு முட்டையின் மஞ்சள் கருவின் ஊட்டச்சத்து மதிப்புகள் தோராயமாக பின்வருமாறு:

  • கலோரிகள்: சுமார் 55 கிலோகலோரி
  • புரதம்: சுமார் 2.7 கிராம்
  • கொழுப்பு: தோராயமாக 4.5 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 1 கிராம் குறைவாக
  • கொலஸ்ட்ரால்: தோராயமாக 184 மில்லிகிராம்கள்
  • வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: கணிசமான அளவு வைட்டமின் டி, வைட்டமின் பி12, கோலின், செலினியம் மற்றும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

முட்டை அளவு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து இந்த மதிப்புகள் சற்று மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்க்கு முட்டை நல்லதா?

நாம் மேற்கண்ட ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் அடிப்படையில் சர்க்கரை நோயாளிகள், மஞ்சள் கருவை விட முட்டையின் வெள்ளைக்கருவை அதிகம் உட்கொள்வதில் கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அவை இரத்த சர்க்கரை அளவை கணிசமாக பாதிக்காமல் உயர்தர புரதத்தை வழங்குகின்றன.

இருப்பினும், முட்டையின் இரண்டு பகுதிகளும் மதிப்புமிக்க ஊட்டச்சத்தை வழங்குகின்றன, எனவே முழு முட்டைகளையும் எப்போதாவது உணவில் சேர்த்துக்கொள்வது சத்தான உணவுத் திட்டத்திற்கு பங்களிக்கும்

முட்டையை ஆரோகியமாக சமைக்கும் முறைகள்

  • முட்டைகளை வறுப்பதற்கு பதிலாக அப்படியே முழுதாக வேகவைத்தோ அல்லது உடைத்து வேகவைத்தோ (poached eggs) சமைப்பது ஆரோக்கியமான முறையாகும்.
  • முட்டைகளை இறைச்சி அல்லது சீஸ் போன்ற நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உண்பதற்குப் பதிலாக, காய்கறி சாலட் அல்லது முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் சாப்பிடுவதே சிறந்த வழியாகும்.
  • முட்டையை வறுப்பதாக இருந்தால் ஆலிவ் எண்ணெய் போன்ற இதயத்துக்கு ஆரோக்கியமான எண்ணெய்களையே பயன்படுத்துங்கள். ஏனெனில், ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை நீங்கள் சமைக்கும் முறையும்  பாதிக்கலாம்.

இறுதிச்சுருக்கம்

இந்த வலைப்பதிவின் மூலம், முட்டையின் சராசரி ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா என்பது குறித்து உங்களுக்கு நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கும்.

இருப்பினும், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் (bypass surgeries, angioplasty and stenting) போன்ற இதய நோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சர்க்கரை நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடும் முன் தங்கள் மருத்துவரையோ அல்லது இருதயநோய் நிபுணர்களையோ அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.