சர்க்கரை நோய்க்கு காபி நல்லதா?அதன் அறிவுரைகளையும் குறிப்புகளையும் அறிந்து கொள்ளுங்கள்

உலக அளவில் காபி ஒரு பிரபலமான பானமாகும். காபியின் மீதான பிரியத்திற்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட விதிவிலக்கல்ல. “சர்க்கரை நோய்க்கு காபி நல்லதா?” என்பது சர்க்கரை நோயாளிகளிடையே எழும் பொதுவான ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில்களைக் கண்டறிய இந்த வலைப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

சர்க்கரை நோய்க்கு காபி நல்லதா? அதன்  அறிவுரைகளையும் குறிப்புகளையும் அறிந்து கொள்ளுங்கள்

காபி மற்றும் சர்க்கரை நோய்

காபி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் தனிப்பட்ட சர்க்கரை நோய் கட்டுப்பாட்டின் அடிப்படையில் நீங்கள் காபி குடிக்கும் அளவைத் தீர்மானியுங்கள். அதற்கான வழிகாட்டுதலுக்கு ஒரு உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது.

சர்க்கரை நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒன்று முதல் இரண்டு கப் வரை வழக்கமான காபி ;(சுமார் 200 மில்லி கிராம் காஃபின் (caffeine) கொண்டது) குடிப்பது இரத்த சர்க்கரை அளவை பாதிக்காமல் இருக்கும். அவை சர்க்கரை அளவை அதிகமாக்கவோ அல்லது குறைவாகவோ செய்யலாம்.

அதேசமயத்தில் சில ஆய்வுகளின்படி, வழக்கமான டிகாஷன்/ஃபில்டர்  காபி ;(சிக்கரி இல்லாதது) அல்லது டிகாஃப் (decaffeinated – காஃபின் நீக்கப்பட்ட காபி), டைப் 2 சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, காபி உட்கொள்ள சில ஆரோக்கியமான குறிப்புகள் இங்கே:

உங்கள் காபி அளவை குறைக்கவும்

பெரும்பாலான மக்களுக்கு, ஒரு நாளைக்கு 2-3 கப் காபி போதுமானது என்று அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், தனிப்பட்ட முறையில் மாறுபடும், என்பதால் ஆலோசனைக்கு ஒரு உணவியல் நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

கருப்பு காபியை தேர்வு செய்யவும்

உங்கள் காபியில் சர்க்கரை, இனிப்பு அல்லது பால்  சேர்க்க வேண்டாம். நீங்கள் இனிப்பு வேண்டுமென விரும்பினால், சர்க்கரை மாற்று (Sugar Substitute) அல்லது சிறிது சீனித்துளசியைப் (Steivia-)பயன்படுத்தவும்.

கோப்பை அளவில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் காபி கோப்பைகளின் அளவைக் கவனியுங்கள். சிறிய கோப்பையை பயன்படுத்துவது காஃபின் அதிகமாக உட்கொள்வதை கட்டுப்படுத்த உதவும்.

இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும்

காபி உங்கள் உடலை எப்படி பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்கவும். ஏனெனொல், சிலருக்கு காஃபின் உட்கொண்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு ஏற்படலாம்.

காஃபின் நீக்கப்பட்ட காபியை (decaffeinated) தேர்ந்தெடுங்கள்

காஃபின் (caffeine) உங்கள் இரத்த சர்க்கரையை பாதித்தால், காஃபின் நீக்கப்பட்ட காபியைத் தேர்ந்தெடுக்கவும்.

போதுமான தண்ணீர் குடிக்கவும்

நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும், ஏனெனில் காபி உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படுத்தலாம்.

காபி சேர்ப்பிகள் (additives) பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

காபி சேர்ப்பிகளான க்ரீமர்கள் (creamers) மற்றும் சுவையூட்டப்பட்ட சிரப்களில் (syrups) கூடுதல் சர்க்கரைகள் அல்லது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். பாதாம் அல்லது கொழுப்பு நீக்கிய பால் போன்ற ஆரோக்கியமான மாற்றுகளை பயன்படுத்துங்கள்.

உங்கள் உடலில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் உடலில் காபியின் விளைவுகளை கவனியுங்கள். அது இரத்த சர்க்கரை அல்லது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதை நீங்கள் கண்டால், அதற்கேற்ப உங்கள் காபி உட்கொள்ளலை சரிசெய்யவும்.

சுகாதார நிபுணரை அணுகவும்

உங்கள் காபி பருகும் அளவு குறித்து மருத்துவரிடம் ஆலோசனை /விவாதிப்பது அவசியம், குறிப்பாக உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது உங்கள் குறிப்பிட்ட உணவுத் தேவைகள் மற்றும் சுகாதார இலக்குகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

இறுதிச்சுருக்கம்

எனவே, “சர்க்கரை நோய்க்கு காபி நல்லதா?” என்பது பற்றி இந்த வலைப்பதிவு மூலம் உங்களுக்கு நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கும். இருந்தாலும், காபி ஒவ்வொரு நபரையும் வித்தியாசமாக பாதிக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இறுதியாக, உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அல்லது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தால், காபி உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது நன்மை பயக்கும்