கிட்னிகள் (சிறுநீரகங்கள்) நம் உடலின் நலத்துக்கு மிகவும் முக்கியமான உறுப்புகள். இந்த இரண்டு பீன்ஸ் வடிவ கிட்னிகள் நம் உடலிலிருந்து கழிவுகளை வடிகட்டி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, தண்ணீர் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும், சிறுநீரக (kidney) நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நேரங்களில், அவை கடைசி நிலைக்கு சென்ற பிறகுதான் கவனிக்கப்படுகின்றன. சிறந்த செய்தி என்னவென்றால், உங்கள் கிட்னிகள் பாதுகாப்பிற்கு அன்றாட வாழ்க்கையில் சில கவனமுள்ள மாற்றங்கள் செய்தால் உங்கள் சிறுநீரகங்களின் நீண்ட ஆயுளுக்கு நன்றாக இயங்கும். இந்த வலைப்பதிவில், கிட்னி எப்படி வேலை செய்கிறது மற்றும் சிறுநீரக பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கிட்னி (சிறுநீரகம்) எப்படி வேலை செய்கிறது?
கிட்னிகள் பல முக்கிய வேலைகளை செய்கின்றன:
- இரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் விஷப்பொருட்களை வெளியேற்றுகின்றன.
- உடலில் தண்ணீரின் அளவை சமநிலைப்படுத்தி, நீரிழப்பு அல்லது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன.
- சோடியம் மற்றும் திரவ அளவுகளை கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகின்றன.
- சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
இவை சக்திவாய்ந்த உறுப்புகளாக இருந்தாலும், உயர் இரத்த அழுத்தம், கட்டுபாடில்லாத நீரிழிவு நோய் ,தவறான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் சிறிது சிறிதாக பாதிக்கப்படலாம். கிட்னி பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளை விரைவில் உணர்வது, நீண்ட கால பாதிப்புகளைத் தவிர்க்க உதவும்.
சிறுநீரக பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள்
பெரும்பாலான சிறுநீரக பாதிப்புகள் மிகவும் மோசமான நிலையை அடையும் வரை வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருப்பினும், சில ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில்
- விவரிக்க முடியாத சோர்வு மற்றும் பலவீனம்
- கணுக்கால், கால்கள் அல்லது கைகளில் வீக்கம்
- தொடர்ச்சியான உயர் இரத்த அழுத்தம்
- நுரை அல்லது அடர் நிற சிறுநீர்
- கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது மூளைச் சோர்வு.
இவை சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக நோயின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். நீங்கள் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால், அது நீண்டகால சிறுநீரக நோய் (Chronic Kidney Disease – CKD) அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம். மேலும், டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். எனவே, உடனடி கவனமும், தேவையான சிகிச்சையும் பெறுவது டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெரும் நிலையை தடுக்கலாம் அல்லது தள்ளிப்போடலாம்.
முடிவுரை
சிறுநீரகங்கள் நம் உடலின் முக்கியமான உறுப்பு என்பதை நாம் உணர வேண்டும். அவை பாதிக்கப்படும்போது, ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். அறிகுறிகள் இருந்தவுடன் மருத்துவரை சந்தித்து தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையை மேற்கொள்வது, பின்னே ஏற்படக்கூடிய தீவிர சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தவறான வாழ்க்கை முறை ஆகியவை சிறுநீரகங்களை பாதிக்கும் முக்கிய காரணிகள் என்பதால், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் சரியாக பின்பற்ற வேண்டும்.
ஈரோடு டயபட்டீஸ் ஃபவுண்டேஷனும் (EDF), MMCH மருத்துவமனையும், சிறுநீரகங்களை பாதுகாக்க மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைகளை நிர்வகிக்க உதவியளிக்க உறுதியாக செயல்பட்டு வருகின்றன. இங்கு உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ப தனிப்பயன் உணவுத்திட்டங்களும் வாழ்க்கை முறை ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இன்று செய்யும் சிறிய ஒரு மாற்றத்தால் நீண்டகால நன்மையை பெறுங்கள், உங்ள் கிட்னி நலனுக்கான பயணத்தை இப்போதே துவங்குங்கள்!