நீரிழிவு எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. சரியாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட்ட சர்க்கரை நோயாளிகளை விட அதிக எலும்பு இழப்பை அனுபவிக்கலாம்.
சர்க்கரை நோயுடன் தொடர்புடைய எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகள்
- ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) – போதுமான எலும்பு தாது அடர்த்தி இல்லாததன் காரணமாக மிகவும் பலவீனமாக இருக்கும் எலும்புகள்.
- மூட்டு தேய்மானம்(கீல்வாதம் )(Osteoarthritis) – இது மூட்டுகளில் ஏற்படும் ஒரு நிலை, இதன் விளைவாக மூட்டு குருத்தெலும்பு முறிவு ஏற்படுகிறது.
- சார்கோட் மூட்டு (Charcot joint) – நீரிழிவு நரம்பு பாதிப்பு (neuropathy) மூலம் ஏற்படும் மூட்டு சிதைவு, உணர்வின்மை மற்றும் முனைகளில் உணர்திறன் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
- நீரிழிவு கை நோய்க்குறி (Diabetic hand syndrome) – கைகளில் தோல் தடிமனாக மாறி, விரல்களை நகர்த்துவது அல்லது உள்ளங்கைகளை ஒன்றாக நகர்த்துவது சவாலாகிறது.
- உறைந்த தோள்பட்டை (Frozen shoulder) – வலியுடன் கூடிய தோள்பட்டை சில நேரங்களில் வீக்கம் ஏற்பட்டு ஆசைப்பதற்கு கடினமாகிறது.
- டுபுய்ட்றேன் சுருக்கம் (Dupuytren’s contracture) – விரல்கள் மற்றும் உள்ளங்கையின் தோலின் கீழ் உள்ள திசுக்கள் தடிமனாகவும் வடுவாகவும் மாறி, இதனால் கைகளில் சிதைவு ஏற்படுகிறது.
- தசை நார் இருகுதல் (Diffuse idiopathic skeletal hyperostosis) – முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் இறுக்கப்படுவதால், முதுகு அல்லது கழுத்தில் வலி மற்றும் விறைப்பு ஏற்படலாம்.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிக்குறிப்புகள்
சர்க்கரை நோயாளிகளிடையே ஆரோக்கியமான எலும்புகளை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகள் இங்கே:
கால்சியம் நிறைந்த உணவு
உங்கள் தினசரி உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். கால்சியத்தின் நல்ல ஆதாரங்களாக இருப்பவை பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் ஆகும். நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக (Lactose intolerant) இருந்தால் அல்லது பால் அல்லாத உணவுகளை விரும்பினால், சோயா பால் அல்லது பாதாம் பால் போன்ற வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான கால்சியம் நிறைந்த பால் மாற்றுகளை பயன்படுத்தலாம்.
மற்ற கால்சியம் நிறைந்த உணவுகளில் கீரை, பரட்டைகீரை, ப்ரோக்கோலி போன்ற இலை பச்சை காய்கறிகள் மற்றும் டோஃபு (Tofu), பாதாம் மற்றும் எள் போன்றவை அடங்கும்.
வைட்டமின் டி சேர்த்துக்கொள்ளுதல்
நமது உடலில் கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் வலுவான எலும்புகளுக்கு, வைட்டமின் டி இன்றியமையாதது. சூரிய ஒளி வைட்டமின் D இன் இயற்கையான ஆதாரமாக இருந்தாலும், போதுமான அளவு பெறுவது சவாலாக இருக்கலாம். இதனை ஈடு செய்ய சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற வைட்டமின் டி நிறைந்த மீன்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கூடுதலாக, முட்டையின் மஞ்சள் கரு, வலுவூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட பால் அல்லது தாவர அடிப்படையிலான பால் மாற்றுகள் உங்கள் வைட்டமின் டி உட்கொள்ளலுக்கு பங்களிக்கும்.
தினசரி உடற் பயிற்சி
உங்கள் எலும்புகளை வலுப்படுத்த தொடர்ந்து எடை தாங்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். எடை தாங்கும் பயிற்சிகளில் நடைபயிற்சி, ஜாகிங், நடனம் மற்றும் படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற செயல்பாடுகள் அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் (நிர்வகிக்கவும்)
முக்கியமாக உயர் இரத்த சர்க்கரை எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். ஒரு சீரான உணவுப் பழக்கத்தை பின்பற்றவும். உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கண்காணிக்கவும். உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரிவர எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், வழக்கமான இரத்த சர்க்கரை கண்காணிப்பு மற்றும் வழக்கமான சோதனைகள் சர்க்கரை நோய் மேலாண்மைக்கு அவசியம்.
நீரிழிவு நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவும்
மேற்கண்ட அனைத்திலும் எந்தவொரு புதிய செயலையோ உணவையோ தொடங்குவதற்கு முன், நீரிழிவு மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்கவும். அது உங்கள் உடல்நிலையுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். மேலும், உங்கள் சர்க்கரை நோய் மேலாண்மை மற்றும் எலும்பு ஆரோக்கியக் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மருத்துவ நிபுணருடன் சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை பின்பற்றுங்கள்.
இறுதிச்சுருக்கம்
இந்த குறிப்புகள் சர்க்கரை நோயுடன் தொடர்புடைய எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கான பொதுவான பரிந்துரைகள் ஆகும். உங்கள் தனிப்பட்ட நிலைமையை கருத்தில் கொண்டு, சர்க்கரை நோயை நிர்வகிக்கும் போது ஆரோக்கியமான எலும்புகளை மேம்படுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை மருத்துவ நிபுணர்களிடமிருந்து பெறுவது மிகவும் முக்கியமானது.