இந்த கோடை காலம் மிகவும் கடுமையாக உள்ளது. பல இடங்களில் வெப்ப அலைகள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகிறது. எனவே, அனைவரும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், கடுமையான வெப்பநிலையை கவனத்தில் கொண்டு, ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான கூடுதல் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வலைப்பதிவில், ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் என்னவென்று அறிந்து, அதன் சிக்கல்களைத் தவிர்க்க உடனடியாக எடுக்க வேண்டிய சிகிச்சையைப் பற்றிப் பார்ப்போம்.
ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்
பொதுவாக, ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் தீவிரத்தின் அடிப்படையில் பல்வேறு வகையாக வேறுபடலாம், ஆனால் பெரும்பாலும் பின்வருவன அடங்கும்:
- உடல் வெப்பநிலை 104°F (40°C) அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.
- குழப்பம், கலக்கம், குளறிய பேச்சு, எரிச்சல், மயக்கம் அல்லது கோமா போன்ற மாற்றப்பட்ட மனநிலை அல்லது நடத்தை ஏற்படலாம்.
- சருமம் சிவந்து சூடாகவும் வறண்டதாகவும் உணரலாம்.
- விரைவான மற்றும் ஆழமற்ற சுவாசம்.
- மிக விரைவான இதயத் துடிப்பு மற்றும் விரைவான சுவாசம் (ஹைபர்வெண்டிலேஷன்) ஏற்படலாம்.
- கடுமையான துடிக்கும் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்.
- தொடர்ந்து நிற்காத குமட்டல் மற்றும் வாந்தி.
- உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு எலக்ட்ரோலைட் சமநிலையின்மை காரணமாக தாகம், தசைப்பிடிப்பு அல்லது பலவீனம் ஏற்படலாம்.
- வலிப்பு ஏற்படலாம்.
- இறுதியாக நினைவு இழப்பு ஏற்படலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் விரைவாக மோசமாகிக் கொண்டிருந்தால், உடலை குளிர்ச்சியாக்கும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு, உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். ஹீட் ஸ்ட்ரோக் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக வெப்பநிலையில் இந்த அறிகுறிகளை மனதில் கொண்டு கவனமாக இருக்க வேண்டும்.
கண்காணிப்பு மற்றும் மேலாண்மை
1.இரத்த சர்க்கரை அளவுகளை கண்காணிக்கவும்
சர்க்கரை நோயாளிகள் வெப்பம் சார்ந்த சிக்கல்களுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதால், குறிப்பாக சூடான காலநிலையில் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
2.எலக்ட்ரோலைட் அளவுகளைக ண்காணிக்கவும்
சர்க்கரை நோயாளிகள் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் போதுமான அளவை பராமரிக்க வேண்டும். ஏனெனில் வெப்ப காலத்தில் அதிக வியர்வை காரணமாக எலக்ட்ரோலைட் உடலில் குறையலாம்.
ஹீட் ஸ்ட்ரோக்கை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்
- சர்க்கரை நோயாளிகள் வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்க உடலை குளிர்ச்சியாகவும், நீர் சத்து குறையாமல் வைத்திருக்க வேண்டும்.
- அதிக வெப்ப காலத்தில், வெளிப்புற செயல்பாடுகளை தவிர்த்து வீட்டினுள்ளே செய்யக்கூடிய பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- உதவி தேவைப்படும் மூத்த குடிமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- சிறந்த காற்றுச் சுழற்சி மற்றும் குளிர்ச்சிக்காக சுவாசிக்கக்கூடிய மெல்லிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- வெளியில் இருக்கும்போது வெப்பத்தைத் தவிர்க்க நிழலான அல்லது குளிரூட்டப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
- தேவைப்பட்டால் குளிர்ந்த தண்ணீர் குளியல், மின்விசிறிகள் அல்லது குளிரூட்டும் துண்டுகள் மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்கவும்.
- சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன், சன்கிளாஸ்கள் மற்றும் தொப்பிகளை அணிந்து செல்லுங்கள்.
- குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு, பாதங்கள் மற்றும் கணுக்கால் வீக்கம் ஏற்பட்டால், உடலில் நீர் சத்து குறைவாக இருப்பதைக் குறிக்கும்.
- உங்கள் உடல் நிலையைப் புரிந்து, நீங்களே வெப்பமான காலநிலையின் போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
- உடல் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடிய அடுப்புகள், ஹீட்டர்கள் போன்றதைத் தவிர்க்கவும்.
- பயணம் செய்யும் போது, தேவையான தண்ணீர், மருந்துகள் மற்றும் பொருட்களை பேக் செய்துகொள்ளுங்கள்.
அவசரநிலைக்குத் தயாராக இருங்கள்
பொதுவாக, ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளைப் பற்றியும், அவசரகாலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றியும் தெரிந்து வைத்திருப்பது முக்கியமானது. மேலும், அவசரகால தொடர்புகளை உடன் வைத்திருப்பது, தேவைப் படும்போது உதவியை எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது. கூடுதலாக, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு உடனடி மருத்துவ உதவியை எங்கு பெறுவது எனக் கற்பிப்பது உயிரைக் காப்பாற்றும்.
இறுதிச்சுருக்கம்
எனவே, கடுமையான வெப்பத்தின் போது இந்த உதவிக்குறிப்புகளைக் கவனத்தில் கொள்வதன் மூலம், சர்க்கரை நோயாளிகள் வெப்பம் தொடர்பான சிக்கல்களிலிருந்து தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகள் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் பிற உடல் நிலைமைகளை நிர்வகிப்பதற்கு உங்கள் நீரிழிவு மருத்துவரின் பரிந்துரைகளை எப்பொழுதும் பின்பற்றவும்.