இன்று இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அதிக மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் இதய நோய்களை அதிகரிக்க காரணமாகின்றன. உலக இதய தினம் மக்களுக்கு தங்கள் வாழ்க்கை முறையை கவனித்து, இதயத்தை பாதுகாப்பதற்கான நினைவூட்டல் நாள். இது ஒரு சாதாரண விழிப்புணர்வு நாள் மட்டுமல்ல; ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்வு செய்ய உலகம் முழுவதும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அழைப்பும் ஆகும்.
உலக இதய தினம் ஏன் முக்கியம்?
இருதய நோய்கள் உலகில் முக்கியமான மரண காரணிகளில் ஒன்றாகும். ஆனால் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பெரும்பாலான இதய நோய்களைத் தடுக்கலாம். உலக இதய தினம் நோக்கம் மக்களை ஒன்றிணைத்து, இதய ஆரோக்கியம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை நினைவூட்டுவதாகும்.
இதயத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய வழிகள்
- பழங்கள்,காய்கறிகள்,முழுதானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு புரதங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
- அதிக சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளைத் தவிர்க்கவும்.
- தினம் குறைந்தது 30நிமிடங்கள் நடப்பது,சைக்கிள் ஓட்டுவது அல்லது யோகா போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
- புகைபிடித்தல் தவிர்க்கவும்;மதுபானத்தைகுறைந்த வரம்பில்(லோயர்limit) வைத்துக் கொள்ளுங்கள்.
- தியானம்,மூச்சுப்பயிற்சி அல்லது விருப்பமான பொழுதுபோக்குகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்கவும்.
இந்த எளிய வழிமுறைகள் இதய நோய் அபாயத்தை குறைத்து, உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்.

நீரிழிவு (Diabetes) மற்றும் இதய ஆரோக்கியம்
நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம். இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், அது இரத்தக் குழாய்களை சேதப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இதய தாக்கம் (heart attack) ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.
இதய நோய்களின் ஆரம்பக்கட்ட கண்டறிதல்
(Early Detection of Heart disease)
இதய நோய்கள் பெரும்பாலும் மெதுவாக உருவாகின்றன. ஆரம்பத்தில் பெரும்பாலும் மிகக் குறைந்த அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன. மார்பு வலி, மூச்சுத்திணறல், சோர்வு போன்ற சிறிய எச்சரிக்கை சைகைகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆகவே, இதை ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் மிகவும் முக்கியம்.
ஆரம்பக்கட்ட கண்டறிதலின் முக்கியத்துவம்
1. சிறிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல்: ECG, எகோ ஸ்கேன் (echo scan), இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை போன்ற சோதனைகள் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் ஆரம்பத்திலேயே காட்டும்.
2. முன்கூட்டியே சிகிச்சை: ஆரம்ப கட்டத்தில் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள், உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறைக் கட்டுப்பாடுகளை உடனே தொடங்கலாம்.
3. பெரிய அபாயங்களைத் தடுப்பது: இதய தாக்கம்/மாரடைப்பு (heart attack), பக்கவாதம் (stroke) போன்ற பெரிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன் தடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆரோக்கிய இதயத்துடன் எதிர்காலம்
இதய ஆரோக்கியமே நீண்டவும், சிறப்பானவும் வாழ்க்கையின் அடிப்படையாகும். உலக இதய தினம் செய்தி எளிமையானதாயிருந்தாலும் வலிமையானது இன்றே உங்கள் இதயத்தை பாதுகாத்தால், நாளை ஆரோக்கியமாக இருக்கும்.
ஈரோடு டயாபடீஸ் பௌண்டேஷன் (EDF) மற்றும் MMCH இணைந்து, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க சத்தான உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. கீரைகள், பருப்பு, விதைகள், முழுதானியங்கள், பழங்கள் போன்ற இதயத்திற்கு நல்ல உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை சமநிலைப்படுத்தவும், இதய செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும். ஆரோக்கியமான உணவுடன் சீரான இதய பரிசோதனைகளையும் இணைத்தல் மிகவும் முக்கியம் என்று எங்கள் குழு வலியுறுத்துகிறது.