உலக நீரிழிவு தினம் 2025 : உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தக் கட்டுப்பாடு மூலம் சர்க்கரை நோயை நிர்வகிக்கும் வழிகள்

நமது வாழ்க்கை முறை வேகமடைந்ததாலும், மனஅழுத்தம் அதிகரித்ததாலும் சர்க்கரை நோய் இன்று உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. மருந்துகள் மட்டும் போதாது; வாழ்க்கை முறையில் மாற்றம் மிக முக்கியம். உலக நீரிழிவு தினம் 2025 நமக்கு நினைவூட்டுவது, உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு போன்ற எளிய பழக்கங்கள் நீரிழிவை கட்டுப்படுத்த சிறந்த வழிகளாகும்.
இதை வலியுறுத்தும் நோக்கில் EDF (Erode Diabetes Foundation) பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி வருகிறது.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

சர்க்கரை நோயாளிகள் தினசரி உடற்பயிற்சியைப் பழக்கமாக மாற்றினால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே மேம்படும். தொடர்ச்சியான நடைபயிற்சி, யோகா அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவை இரத்த சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தும்.

உடற்பயிற்சியின் சில முக்கிய நன்மைகள்:

● சர்க்கரை அளவை சீராக வைத்தல்

● உடல் எடையை கட்டுப்படுத்தல்

● இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் குறைத்தல்

● மன அமைதி மற்றும் உற்சாகத்தை அதிக படுத்தல்

தினசரி 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைபயிற்சி கூட நீரிழிவு மேலாண்மையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உலக நீரிழிவு தினம் 2025: உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு மூலம் சர்க்கரை நோயை நிர்வகிக்கும் வழிகள்

மன அழுத்தம் மற்றும் அதன் தாக்கம்

மனஅழுத்தம் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதித்து சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். வேலை அழுத்தம், தூக்கக் குறைவு, பதட்டம் போன்றவை நீரிழிவை மோசமாக்கலாம். இதை சமாளிக்க வாழ்க்கையில் சில அமைதியான பழக்கங்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

மன அழுத்தக் கட்டுப்பாட்டுக்கான வழிகள்:

● தினசரி தியானம் அல்லது யோகா
● ஆழ்ந்த சுவாசப் பயிற்சி
● இயற்கைஉடன் சிறிது நேரம் செலவிடுதல்
● இசை கேட்பது அல்லது மன அமைதி தரும் செயல்பாடுகள்

இவை அனைத்தும் மன அமைதியை அளித்து, சர்க்கரை கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நீரிழிவு தினம் 2025 இதையே வலியுறுத்துகிறது. மனஅழுத்தம் குறைந்தால் ஆரோக்கியம் மேம்படும்.

சீரான வாழ்க்கை முறையின் அவசியம்

சர்க்கரை நோயாளிகளுக்கு சீரான வாழ்க்கை முறை மிக முக்கியம். உணவு, தூக்கம் மற்றும் உடற்பயிற்சி நேரத்தை ஒழுங்காகப் பேணுதல் நோயை கட்டுப்படுத்த உதவும்.

சீரான வாழ்க்கை முறைக்கான சில முக்கிய வழிமுறைகள்:

  • தினமும் ஒரே நேரத்தில் உண்பது
  • போதுமான நேரம் தூங்குதல் (7 -8 மணி நேரம்)
  • அதிக தண்ணீர் குடித்தல்
  • காய்கறி, பழங்கள் மற்றும் முழு தானியங்களை அதிகப்படியாகச் சேர்த்தல்
  • இனிப்பு மற்றும் பொரித்த உணவுகளை குறைத்தல்

சீரான வாழ்க்கை முறைக்கான சில முக்கிய வழிமுறைகள்:

இந்த சிறிய பழக்கங்கள் நீண்டகாலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மருந்துகளுக்கு இணையாக பலனளிக்கும்.

உலக நீரிழிவு தினம் 2025: உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு மூலம் சர்க்கரை நோயை நிர்வகிக்கும் வழிகள்

முன்னெச்சரிக்கை மற்றும் பரிசோதனைகள்

நீரிழிவை கட்டுப்படுத்தும் மற்றொரு முக்கிய அம்சம் வழக்கமான மருத்துவ பரிசோதனை. HbA1C மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை முறைப்படி பரிசோதிப்பது நோயின் நிலையை கண்காணிக்க உதவும்.

EDF (Erode Diabetes Foundation) மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்சி, உணவுமுறை மற்றும் மருந்தளவை சரிசெய்தல் மிகவும் அவசியம். இது நீண்டகால ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.

ஆரோக்கியம் நம் கைகளில்

சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் கவனிக்க வேண்டிய நிலையாக இருந்தாலும், அதைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் உள்ளது. உடற்பயிற்சி, சீரான உணவுமுறை, மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு, இவை மூன்றும் சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் சக்தி கொண்டவை.

உலக நீரிழிவு தினம் 2025 நமக்கு உணர்த்துவது இதுவே, மருந்துகள் மட்டுமல்ல, நம் பழக்கவழக்கங்களும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இன்று தொடங்கும் சிறிய மாற்றம் நாளைய ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளமாக அமையும்.

ஈரோடு டயாபடீஸ் பௌண்டேஷன் (EDF) மற்றும் MMCH இணைந்து,
உலக நீரிழிவு தினம் 2025-ஐ முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற செயல்பாடுகள் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. இன்றே தொடங்குங்கள் – சுறுசுறுப்பான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான நாளை உருவாக்குங்கள்!



Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*