சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பு அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

பொதுவாக, நமது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் இருக்கிறது. இதுவே நமது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். நமது உடலால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யவோ அல்லது அதை முறையாகப் பயன்படுத்தவோ முடியாதபோது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக தொடர்ந்து இருக்கும்போது படிப்படியாக உங்கள் சிறுநீரகம் பாதிப்பு அடைகிறது. இந்த வலைப்பதிவில் சர்க்கரை நோயினால் ஏற்படும் கிட்னி பாதிப்பு அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பு அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic Kidney Disease) என்றால் என்ன?

சர்க்கரை நோயால் ஏற்படும் பொதுவான ஒரு சிக்கல் நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic Kidney Disease) ஆகும். இது நீரிழிவு நெஃப்ரோபதி (Diabetic Nephropathy) என்றும் குறிப்பிடப்படுகிறது.பொதுவாக, நமது உடலில் இருந்து  கழிவு பொருட்கள கிட்னியால் சுத்தப்படுத்தப்படுகிறது. நீரிழிவு நெஃப்ரோபதி உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றும் கிட்னியின் செயலை பாதிக்கிறது .

கிட்னி பாதிப்பின் காரணங்கள்

கிட்னிபாதிப்பு சர்க்கரை நோயாளிகளில் சுமார் 40 சதவீகத்தினரை பாதிக்கிறது. உங்கள் கிட்னிகளில் உள்ள மில்லியன் கணக்கான சிறிய சிறுநீரக உறுப்பு (Nephrons) உங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டுகின்றன.

உயர் இரத்த சர்க்கரை அளவானது கிட்னிகளில் உள்ள இந்த சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது கிட்னியின் செயல்பாட்டைக் குறைத்து இறுதியில் கிட்னி செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. இதுவே நீரிழிவு நெஃப்ரோபதி ஏற்படக் காரணம்.

கிட்னி பாதிப்பின் அறிகுறிகள்

ஆரம்ப கட்டங்களில், சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பு எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால், அதன் பாதிப்பு அதிகமாகும் பொழுது கீழ்காணும் அறிகுறிகள் ஏற்படலாம்.

  • உடல், கால்கள் மற்றும் கைகளின் வீக்கம்
  • உடல் சோர்வு அல்லது பலவீனம்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • பசியிழப்பு
  • தூங்குவதில் சிரமம்
  • அரிப்பு அல்லது வறண்ட தோல்
  • சிறுநீர் வெளியேற்றத்தில் குறைவு
  • சிறுநீர் நிறத்தில் ஏற்படும் மாற்றம்

நீரிழிவு சிறுநீரக நோயை எவ்வாறு கண்டறிவது?

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால்,தொடர்ந்து மருத்துவர் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் அறிகுறிகளின் அடிப்படையில் நீரிழிவு நெஃப்ரோபதி பாதிப்பு இருப்பதாக உங்கள் மருத்துவர் சந்தேகித்தால், அதை உறுதிப்படுத்த கீழ்வரும் சில சோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.

சிறுநீர் பரிசோதனை (Urine Test)

உங்கள் சிறுநீர் மாதிரியில் புரதம்(protein )மற்றும் கிரியேட்டினின் (creatinine) விகிதம்-Urine PCR % அதிகமாக இருந்தால் அது நீரிழிவு நெஃப்ரோபதியின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

இரத்த பரிசோதனை (Blood Test)

உங்கள் கிட்னியின் இரத்தத்தை வடிகட்டும் திறன் eGFR சோதனை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இந்தச் சோதனையில், சீரம் கிரியேட்டினின் (Serum creatinine) அளவீடு உங்கள் eGFRஐக் கணக்கிடப் பயன்படுகிறது.

இமேஜிங்/ஸ்கேன் சோதனைகள் (Imaging Tests)

அல்ட்ராசவுண்ட் எனப்படும் இமேஜிங் சோதனை உங்கள் கிட்னிகளின் அமைப்பு மற்றும் அளவை அறிய பயன்படுகிறது. கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT) ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு இமேஜிங் (MRI) சோதனைகள் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் கிட்னிகளுக்கு இரத்தம் செல்லும் விதங்களை தெளிவாக காட்டுகின்றன.

இறுதிச்சுருக்கம்

உங்களுக்கு நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic Kidney Disease) இருப்பது ஆரம்ப நிலையில் உறுதி செய்யப்பட்டால், நீங்கள் சரியான வைத்தியம் உடனே மேற்கொணடு கட்டுபத்த முடியும். ஆகையால், இந்நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிறந்த சிகிச்சைத் திட்டத்தை பின்பற்றினால் இதனால் ஏற்படும் பதிப்புகளில் இருந்து மீளலாம்.

எனவே சர்க்கரை நோய்க்கு தேவையான பரிசோதனைகளை சரிவர பெற்று, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றி வந்தால் சர்க்கரை நோயினால்  ஏற்படும் சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு,ஆரோகியமாக வாழ முடியும்.