சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பை தடுப்பது எப்படி? மற்றும் அதன் வழிமுறைகளைக் காணலாம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பு, ஒரு தீவிரமான சிக்கலாகும். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கிட்னி செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும். இந்த வலைப்பதிவில், சர்க்கரை நோயினால் ஏற்படும் கிட்னி பாதிப்பை தடுப்பது எப்படி?மற்றும் கிட்னியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சில வழிமுறைகளைக் காணலாம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பை தடுப்பது எப்படி?

நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic Kidney Disease)

சர்க்கரை நோய் சிறுநீரக பாதிப்பு நீரிழிவு நெஃப்ரோபதி (Diabetic Nephropathy) என்றும் அழைக்கப்படுகிறது, இது கிட்னியின் இயல்பான செயல்பாட்டை பாதித்து பல்வேறு கிட்னி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இது உருவாக நீண்ட காலம் எடுக்கும், மேலும் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் இருக்காது.

இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதிக்காவிட்டால், உங்களுக்கு நீரிழிவு சிறுநீரக நோய்(Diabetic Kidney Disease) இருப்பது உங்களுக்குத் தெரியாது.

நீரிழிவு சிறுநீரக நோயைத் தடுப்பது எப்படி?

சிறுநீரக நோயைத் தடுக்க பின்வரும் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவும்:

இரத்த சர்க்கரை அளவைப் பராமரித்தல்

சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பைத் தடுக்க உங்கள் இரத்த சர்க்கரை அளவை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த இலக்கு வரம்பிற்குள் வைத்திருப்பது அவசியம்.

நிலையான கண்காணிப்பு, முறையான உணவுமுறை மற்றும் மருந்துகளைக் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிப்பதற்கு உதவும்.

இரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்

சர்க்கரை நெஃப்ரோபதி ஏற்பட உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கியமான காரணம். குறைந்த சோடியம் கொண்ட உணவை உண்பது, வழக்கமான உடற்பயிற்சியில் சரிவர ஈடுபடுவது, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது மற்றும் மன அழுத்தம் இருந்தால் அவற்றை சரி செய்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கிட்னி பாதிப்பின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

ஆரோக்கியமான எடை

சீரான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு மூலம் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது சர்க்கரை நோயுடன் தொடர்புடைய கிட்னி சிக்கல்களை குறைக்கும்.

உங்கள் வயது மற்றும் உயரத்திற்கான ஆரோக்கியமான வரம்பிற்குள் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ-BMI) இலக்காகக் கொள்ளுங்கள்.

புகை பிடிப்பதைத் தவிர்க்கவும்

புகைபிடித்தல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதோடு சர்க்கரை நோயாளிகளில் கிட்னி பாதிப்பை வேகப்படுத்துகிறது.

புகைபிடிப்பதை நிறுத்துவது நீரிழிவு நெஃப்ரோபதி(Diabetic Nephropathy) மற்றும் பிற சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை வெகுவாக குறைக்கும்.

நீர் மற்றும் திரவங்கள் உட்கொள்ளல்

கிட்னியின் செயல்பாட்டை ஆதரிப்பதற்கும், உடலில் நீரிழப்பைத் தடுப்பதற்கும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. அல்லது உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவு குடிக்க வேண்டும்.

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும்

ஆரோக்கியமான உணவு முறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மூலம் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பது சர்க்கரை நோய் மற்றும் அதிக கொழுப்பு அளவுகளுடன் தொடர்புடைய பாதிப்புகளில் இருந்து உங்கள் கிட்னிகளை பாதுகாக்க உதவும்.

வழக்கமான பரிசோதனைகள் பெறுங்கள்

உங்கள் மருத்துவருடன் வழக்கமான பரிசோதனைகள் பெறுவது உங்கள் நீரிழிவு நோயைக் கண்காணிக்கவும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே கண்டறியவும் உதவும். கிட்னி பதிப்பின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க மறக்காதீர்கள்.

இறுதிச்சுருக்கம்

நீரிழிவு சிறுநீரக நோய் சர்க்கரை நோயால் ஏற்படும் கடுமையான சிக்கலாகும். இந்த தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம், சர்க்கரை நோயால் ஏற்படும் கிட்னி பாதிப்பு உருவாகும் அபாயத்தை நீங்கள் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.

உங்கள் சர்க்கரை நோய் பராமரிப்புத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவருடன் ஆலோசிக்க எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.