சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? அதன் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

பொதுவாக பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் பழம் வாழைப்பழம். இதில் சர்க்கரை நோயாளிகள் ​​பலருக்கும் எழும் ஒரு கேள்வி, “சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா?” என்பதுதான்.இந்த வலைபதிவில், ஆண்டு முழுவதும் விளையும் வாழைப்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வா இல்லையா என்பதைக் காண்போம்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? அதன் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

எளிய கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். நடுத்தர அளவிலான ஒரு வாழைப்பழத்தில் 6 கிராம் ஸ்டார்ச் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது.

வாழைப்பழம் அதிக நார்ச்சத்து கொண்டிருக்கிறது. இந்திய சர்க்கரை நோய்க்கான உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் பல ஆனால் வாழைப்பழம் குறைந்த கிளைசெமிக் சுமையைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் சிறுது எச்சரிக்கையுடனே தேர்ந்தெடுக்க வேண்டிய பழம் வாழைப்பழம்.

பின்வரும் குறிப்புகளை பின்பற்றி சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை உண்ணலாம்:

  • நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் மாவுச் சத்து அளவை சிறிது குறைத்துக்கொண்டு வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பெரிய வாழைப்பழத்தை விட சிறிய அல்லது நடுத்தர அளவிலான வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.
  • மிகவும் பழுக்காத பழத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • கிளைசெமிக் சுமையைக் குறைக்கவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும், வாழைப்பழத்தை போதிய இடைவெளி விட்டு  உண்ணுங்கள்.
  • சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க வாழைப்பழத்தை, பாதாம், முழு கொழுப்புள்ள தயிர், கேஃபிர் (Kefir), சார்க்ராட் (Sauerkraut- செர்மன் ஊறுகாய் வகை), புளித்த உணவுகள் போன்ற பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவது சீரான மற்றும் ஆதரவான குடல் நுண்ணுயிரி வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.

வாழைப்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு

வாழைப்பழங்களில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. அவை பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

நடுத்தர அளவிலான ஒரு வாழைப்பழத்தின் (சுமார் 118 கிராம்) ஊட்டச்சத்து மதிப்புகள் இங்கே:

  • கலோரிகள்: சுமார் 80-105 கிலோகலோரி
  • கார்போஹைட்ரேட்டுகள்: சுமார் 27 கிராம்
  • சர்க்கரை: சுமார் 14 கிராம்
  • உணவு நார்ச்சத்து: சுமார் 3 கிராம்
  • புரதம்: சுமார் 1.3 கிராம்
  • கொழுப்பு: சுமார் 0.3 கிராம்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

  • வைட்டமின் சி: தினசரி மதிப்பில் சுமார் 10%
  • வைட்டமின் B6: தினசரி மதிப்பில் சுமார் 20%
  • பொட்டாசியம்: சுமார் 400 மி.கி (தினசரி மதிப்பில் சுமார் 10%)
  • மாங்கனீசு: தினசரி மதிப்பில் இல் சுமார் 15%
  • மக்னீசியம்: தினசரி மதிப்பில் சுமார் 8%

வாழைப்பழத்தின் வகையைப் பொறுத்து இந்த மதிப்புகள் சற்று மாறுபடலாம். மேலும், எவ்வளவு பழுதிருக்கிறது மற்றும் வளரும் சூழ்நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் இது மாறும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழம் தரும் குடல் ஆரோக்கியம்

வாழைப்பழத்தில் நலநுண்ணுயிரிகள் (Probiotic- புரோபயாடிக்) இல்லை. அவை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பாக்டீரியாக்கள்.

இருப்பினும், வாழைப்பழங்களில் ப்ரீபயாடிக்குகள் (prebiotic) கொண்ட உணவு நார்ச்சத்து உள்ளது. ப்ரீபயாடிக்குகள் செரிமானத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள முதன்மையான ப்ரீபயாடிக் இன்யூலின் (Inulin) ஆகும். இன்யூலின் என்பது கரையக்கூடிய நார்ச்சத்து. இது சிறுகுடலில் செரிமானம் அடையாமல் பெருங்குடலை அடைகிறது, அங்கு நலநுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

மேலும், இன்யூலின் பிஃபிடோபாக்டீரியம் (Bifidobacterium) போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மேம்பட்ட செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.

இறுதிச்சுருக்கம்

இந்த வலைப்பதிவு மூலம் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா என்ற உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும்.

சுருக்கமாக, சர்க்கரை நோயாளிகள் பல்வேறு வகையான வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம். இருப்பினும், மிதமான அளவுக் கட்டுப்பாடு முக்கியமானது. உங்கள் சர்க்கரை நோய் உணவுத் திட்டத்தில் வாழைப்பழங்களைச் சேர்ப்பதற்கு முன், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.