சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?

உலகெங்கிலும், நிறைய பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்த நிலையை நீங்கள் கட்டுப்படுத்தலாம் மற்றும் முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலம் விளைவுகளை தவிர்க்கலாம். இந்த வலைப்பதிவில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பாதிப்புகளை எவ்வாறு கண்டறிவது என்பதைப் பார்ப்போம்

சர்க்கரை நோயைக் கண்டறியும் முறைகள்

கீழ்க்கண்ட பரிசோதனைகளின் மூலம் சர்க்கரை நோயை துல்லியமாகக் கண்டறியலாம்:

  • சிறுநீரில் சர்க்கரை பரிசோதனை
  • இரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை
  • உணவுக்கு முன் (காலை வெறும் வயிற்றில்-Fasting sugar)
  • உணவுக்குப் பின் (2 மணி நேரம் கடந்த பின் – PP sugar)
  • HbA,C (இரத்தத்தில் 3 மாத சர்க்கரையின் சராசரி அளவு)
  • குளுக்கோஸ் ஏற்கும் திறன் பரிசோதனை (Glucose Tolerance Test – GTT)

சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

இருதயப் பாதிப்புகள்:

இருதயப் பாதிப்பு ஏற்படமுக்கிய காரணமாக இருப்பவை
  • இரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகமாக இருத்தல்.
  • அதிக இரத்த அழுத்தம் மற்றும் புகை பிடித்தல்
  • நீண்ட நாட்களாகக் கட்டுப்பாடின்றி இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருத்தல்.
  • உடற்பயிற்சி இல்லாமை, அதிக எடை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம்.
இருதயப் பாதிப்பின் அறிகுறிகள்:
  • இடது பக்க நெஞ்சு வலி தோன்றுதல்
  • வலி தோன்றி கை, தோள்பட்டை, முதுகில் பரவுதல்
  • நெஞ்சு கனத்து, பிசைவது போல இருத்தல்
  • அதிக வியர்வை மற்றும் படபடப்பு
இருதயப் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்
  • இரத்தத்தில் கொழுப்புச்சத்து சரியான அளவில் வைத்துக் கொள்ளுதல்
  • உயரத்திற்கேற்ற உடல் எடையைப் பேணுதல் சரியான இரத்த அழுத்தம் (120/80 mmHg)
  • முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல்
  • சீரான உணவு முறையைக் கடைப்பிடித்தல்
  • புகை பிடித்தல், ஆல்கஹால் தவிர்த்தல்
  • முறையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளுதல்.

கண் பாதிப்புகள்:

சர்க்கரை நோய் மற்றும் அதிக இரத்த அழுத்தத்தினால் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்கள் பழுதடைந்து இரத்தக்கசிவு ஏற்படுவதால் விழித்திரை பாதிக்கப்படலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்வதால் கண் பாதிப்பை தடுக்கலாம்.

கண் பாதிப்பின் அறிகுறிகள்:
  • தலைவலி
  • கண் வலி மற்றும் எரிச்சல்
  • மங்கலான பார்வை
  • இரட்டைப் பார்வை
  • கரும்புள்ளிகள் தோன்றுதல்

சிறுநீரகப் பாதிப்புகள்:

இரத்தத்தில் சர்க்கரை நன்கு கட்டுப்பாட்டில் உள்ளபோது சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கவிட முடியும்.

சர்க்கரை நோய் நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாடின்றி உள்ளவர்களுக்கு சிறுநீரக இரத்தக்குழாய்கள் பாதிப்படைகின்றன. இதனால் சிறுநீரில் புரதங்கள் அதிகமாக வெளியேறுகின்றன. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், சிறுநீரகப் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள்:
  • திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்தல்.
  • இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  • சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, எரிச்சல் ஏற்படுதல்
  • மிகக் குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல்.
  • கை, கால் மற்றும் முகங்களில் திடீரென வீக்கம் ஏற்படுதல்.
  • அதிக அளவில் யூரியா, கிரியாடினைன் (Urea, Creatinine) போன்றவை இரத்தத்தில் சேர்ந்திருத்தல்.
  • சிறுநீரில் புரதமும், இரத்தமும் வெளியேறுதல்.
சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கும் முறைகள்:

சிறுநீரகத்தின் வேலைத்திறன் 50 விழுக்காடு பாதிக்கப்படும் வரை எந்த ஓர் அறிகுறியும் தெரிவதில்லை. எனவே, கீழ்க்கண்டவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

  • இரத்தச் சர்க்கரையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்ப வைத்திருத்தல்.
  • குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறை யூரியா, கிரிய மற்றும் புரத அளவு பரிசோதனை செய்தல் (Urea, Creainine and Microalbuminuria).
  • வருடத்திற்கு ஒரு முறை சிறுநீரகச் செயல்திறன் பரிசோதனை செய்தல்.

முடிவுரை:

சர்க்கரை நோய் உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் எனப்படும் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் ஒவ்வொரு நாளும் உங்களை கவனித்துக்கொள்வதன் மூலம், உங்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.