கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இரண்டு முக்கிய வகைகளாக உள்ளது: HDL (நல்ல கொழுப்பு) மற்றும் LDL (தீங்கு விளைவிக்கும் கொழுப்பு). HDL கொழுப்பு உங்கள் இரத்தத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் LDL கொழுப்பை அகற்றுகிறது. இதனால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதயம் தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்க HDL குறைந்திருக்கக் கூடாது. அதனால், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை அவசியம்.

HDL கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
HDL என்பது “நல்ல கொழுப்பு” என்று அழைக்கப்படும் ஒரு வகை கொலஸ்ட்ரால். இது உங்கள் இரத்த நாளங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. HDL முக்கியமாக இரத்த நாளங்களில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்து, கல்லீரலுக்கு கொண்டு சென்று அங்கு அதனை வெளியேற்றுகிறது.
எல்டிஎல்(LDL) கொலஸ்ட்ரால் போல அல்லாமல், இது இரத்த நாளங்களை அடைக்காது. மாறாக, HDL கொழுப்பு அதிகமாக இருந்தால், உங்கள் இதய நோய் அபாயம் குறைந்து, உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
HDL கொலஸ்ட்ரால் ஏன் முக்கியமானது?
HDL கொலஸ்ட்ரால் உங்கள் இரத்த நாளங்களில் சேரும் கொழுப்பு படிவங்களை அழிக்க உதவுகிறது. இது இரத்த நாளங்களில் பிளாக் (Block – கொழுப்பு அடைப்பு) உருவாவதை தடுக்கிறது. மேலும், ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரித்து, உங்கள் இரத்த ஓட்டம் நன்றாக இயங்க உதவுகிறது.
ஆரோக்கியமான HDL அளவுகள் என்ன?
- ஆண்களுக்கு: 40 mg/dL அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
- பெண்களுக்கு: 50 mg/dL அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த அளவுகளுக்கு குறைவாக இருந்தால், இதய நோய் அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கலாம்.
குறைந்த HDL கொலஸ்ட்ராலுக்கான காரணங்கள்
- சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், டிரான்ஸ் கொழுப்பு, மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் HDL அளவுகளை குறைக்கும்.
- உடல் இயக்கம் குறைவால் கொலஸ்ட்ரால் சமநிலையம் பாதிக்கப்படும்.
- புகைப்பழக்கம் HDL அளவுகளை குறைத்து இரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படுத்தும்.
- சிலருக்கு மரபணுவால் குறைந்த HDL அளவு ஏற்படலாம்.
- சர்க்கரை நோய், அதிக எடை, மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற நிலைகள் HDL கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
HDL கொலஸ்ட்ராலை இயற்கையாக அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் நடைமுறைகள்
உணவுகள்
- அவகாடோ (வெண்ணெய் பழம்)
- நட்ஸ்: முந்திரி (Cashew), பாதாம் (Almond), வேர்க்கடலை (Peanut), வால்நட் (Walnut)
- விதைகள்: எள்ளு (Sesame), சியா விதைகள் (Chia Seeds), பூசணிக்காய் விதைகள் (Pumpkin Seeds), சூரியகாந்தி விதைகள் (Sunflower Seeds)
- கொழுப்புச்சத்து நிறைந்த மீன்கள்: சால்மன் (Salmon), மாக்கரல் (Mackerel), சீராப் மீன் (Sardines)
- முழு தானியங்கள்: கம்பு (Pearl Millet), சோளம் (Maize), ஓட்ஸ் (Oats), குவினோவா (Quinoa), பழுப்பு அரிசி (Brown Rice)
- பழங்கள்: மாதுளை (Pomegranate), ஆரஞ்சு (Orange), பிளாக்பெர்ரி (Blackberry), ஸ்ட்ராபெர்ரி (Strawberry)
- காய்கறிகள்: முளைக்கீரை (Spinach), பசலைக்கீரை (Amaranth Leaves), பூகோசு (Cauliflower), பச்சைக் கோசு (Cabbage), ப்ரோக்கொலி (Broccoli)
இயற்கை நடைமுறைகள்
- தினசரி வேகமாக நடப்பது உடலுக்கு நல்லது.
- மெதுவாக ஓடுதல் (ஜாக்கிங்).
- சைக்கிள் ஓட்டுதல் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது.
- புகைப்பழக்கத்தை நிறுத்துவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
- சிவப்பு மது போன்றவற்றை மிதமாக அருந்துவது HDL அளவுகளை அதிகரிக்க உதவும்.
முக்கிய கருத்து
HDL கொலஸ்ட்ரால் உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு அவசியமானது. சரியான உணவுத் தேர்வுகள் செய்யவும், உடல் இயக்கத்தைக் கடைப்பிடிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் இயற்கையாகவே HDL அளவுகளை மேம்படுத்த முடியும். உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், உங்களுக்கு பொருத்தமான திட்டத்தை உருவாக்கவும் தவறாமல் மருத்துவ ஆலோசகரை அணுகவும்.
ஈரோடு டயாபெடீஸ் ஃபவுண்டேஷன் மற்றும் MMCH-ல், சர்க்கரை நோய் தொடர்பான சிக்கல்களை, குறைந்த HDL கொலஸ்ட்ரால் மேலாண்மை செய்யவும், LDL கொலஸ்ட்ரால் தடுப்பதற்கும் முழுமையான உதவிகளை நாங்கள் வழங்குகிறோம். எங்களின் நிபுணர் குழு தனிப்பட்ட உணவு திட்டங்கள், உடற்பயிற்சி ஆலோசனைகள் மற்றும் முழுமையான சிகிச்சை சேவைகளை வழங்கி, உங்கள் இதய ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் உறுதி செய்கிறது. இன்றே உங்கள் ஆரோக்கியப் பயணத்தைத் தொடங்குங்கள். உங்கள் நலனை மேம்படுத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.