சர்க்கரை நோய் ஓர் அறிமுகம்

(சர்க்கரை நோய் ஓர் அறிமுகம் )

இந்த சர்க்கரை நோய் என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய்க்கு காரணமான அனேக காரணிகள் நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், இந்த வலைப்பதிவில்  சர்க்கரைநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதன் வகைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்

சர்க்கரை நோய் என்றால் என்ன?

இவ்வகை நோய் என்பது, நம் உடலில் இன்சுலின் எனும் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டு, செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) நுழைய முடியாமல், இரத்தத்தில் அதிக அளவில் 200 மி.கி.க்கு மேல் (above 200 mg/dl) உயர்ந்துவிடும் நிலையாகும். சர்க்கரை நோயை டயாபடீஸ் (Diabetes) அல்லது நீரிழிவு நோய் என்றும் அழைப்பர்.

சர்க்கரை நோய் ஏற்படக் காரணங்கள் :
  • பாரம்பரியம்
  • உடல் பருமன்
  • உடல் உழைப்பின்மை
  • முறையற்ற உணவுப்பழக்கம்
  • கணையத்தில் குறைபாடு
  • மன உளைச்சல் முதுமை
  • கர்ப்ப காலம்
சர்க்கரை நோயின் அறிகுறிகள் :
  • அதிக பசி
  • அதிக தாகம்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • திடீரென எடை குறைதல் அல்லது அதிகரித்தல்
  • உடல் சோர்வு
  • மயக்கம்
  • மங்கிய பார்வை
  • பாதங்களில் மதமதப்பு
  • அதிக நாட்கள் ஆறாத புண்

சிலருக்கு மேற்கூறிய அறிகுறிகள் ஏதும் இல்லாமலே, சர்க்கரை நோய் தோன்றக் கூடும்.

சர்க்கரை நோயின் வகைகள் :

சர்க்கரை நோயில் மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன

பின்வருமாறு:

முதலாம் வகை (TYPE – 1-Diabetes mellitus (IDDM)) -இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய்

இவ்வகை சர்க்கரை நோயில், உடல் மிகக் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்கிறது, அல்லது இன்சுலின் உற்பத்தி செய்வதேயில்லை இவர்களுக்கு இன்சுலின் ஊசி அவசியம் தேவைப்படுகிறது. எனவே, இது ‘இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய்’ (IDDM) எனப்படுகிறது. இது பெரும்பாலும் இளம் வயதிலேயே ஏற்படுகிறது என்றாலும், எந்த வயதிலும் ஏற்படக்கூடும் என்பதே உண்மையாகும்.

இரண்டாம் வகை (TYPE – II Diabetes mellitus (NIDDM))- இன்சுலின் சார்ந்திராத சர்க்கரை நோய்

இரண்டாம் வகை சர்க்கரை நோயில், இன்சுலின் பற்றாக்குறை அல்லது இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance) ஏற்படுகிறது. இது ‘இன்சுலின் சார்ந்திராத சர்க்கரை நோய்’ (NIDDM) எனப்படுகிறது. முறையான உணவுத்திட்டம், உடற்பயிற்சி, வாய் வழி மருந்துகள் மூலம் இவ்வகை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய் ((Gestational Diabetes mellitus (GD))
மொத்தத்தில்

இந்த நோய் இல்லாத பெண்மணிக்கு கர்ப்பகாலத்தில் எந்தச் சமயத்திலும் கர்ப்பகால சர்க்கரை நோய் (GDM) தோன்றக்கூடும். இந்நிலையில் முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும் இன்சுலின் ஊசி போன்றவையே சரியான சிகிச்சையாகும்.

உங்களுக்கோ அல்லது நீங்கள் விரும்பும் ஒருவருக்கோ இந்த நிலை இருந்தால் கவலைப்பட வேண்டாம், சர்க்கரை நோயை எளிய மற்றும் பயனுள்ள வழிகளில் கட்டுப்படுத்தலாம். மேலும் , உங்கள் நிலைமையை திறம்பட நிர்வகிக்க உங்கள் மருத்துவருடன் நெருக்கமாக பணியாற்றுவது அவசியம்.