சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்

சர்க்கரை நோய் என்பது ஒவ்வொரு நாளும் அதிகமான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பலர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த நிலையின் தீவிரம் பலருக்கு தெரிகிறது இல்லை. இந்த வலைப்பதிவு மூலம் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நரம்பு மண்டலப் பாதிப்புகள் :

சர்க்கரை நோய் 10 வருடங்களுக்கு மேல் உள்ளவர்களில், 60 விழுக்காட்டினருக்கு (60%) நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புண்டு. குறிப்பாக, கட்டுப்பாடற்ற சர்க்கரை உள்ளவர்களுக்கு நரம்புத் திசுக்கள், இரத்த நாளங்கள் பாதிப்படைவதால் இந்நிலை ஏற்படுகிறது. இதை நரம்புத் தளர்ச்சி (Diabetic neuropathy) என்கிறோம்.

நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்:
 • கை, கால்கள் உணர்ச்சியற்று, மரத்துப்போகுதல்.
 • வலி, சூடு, குளிர்ச்சி ஆகியவற்றை உணர முடியாத நிலை ஏற்படுதல். *கால்களில் வலி, குடைச்சல், எரிச்சல் மற்றும் ஊசி குத்துதல் போன்ற நிலை (குறிப்பாக இரவு நேரங்களில்) உணரப்படுதல்.
 • சிலருக்கு உள்ளுறுப்பின் நரம்புகள் பாதிக்கப்படுவதால் (Autonomic nerve damage) வாந்தி, வயிற்றுப்போக்கு, மலம் கட்டுதல் (Constipation) மற்றும் தலை சுற்றல் ஏற்படுதல்.
 • ஆண்மைக் குறைவு ஏற்படுதல்.
 • இருதய நரம்புகள் பாதிப்படைந்து படபடப்பு, ஏற்ற இறக்க இரத்த அழுத்தம், திடீர் மயக்கம் (Giddiness), நினைவு இழத்தல் (Syncope) ஆகியவை ஏற்படுதல்.
 • சிலருக்கு சிறுநீர் தேக்கம், சிறுநீர் சொட்டுதல் போன்றவை ஏற்படுதல்
நரம்பு பாதிப்பை கண்டறியும் பரிசோதனைகள்:
 • நுண்கம்பி பரிசோதனை (Monofilament)
 • கால் உணர்வு அறியும் பரிசோதனை (Biothesiometry)
 • நரம்புச் செயல்திறன் (Nerve conduction study)
 • நரம்புச் சதை பரிசோதனை (EMG test)
 • சி.டிஸ்கேன் (CTScan)
 • தானியங்கி நரம்பு மண்டலப் பரிசோதனை(CAN-Cardiac Autonomic Nerve System Test)

சிகிச்சைகளும் / தடுக்கும் முறைகளும்

 • சர்க்கரைக் கட்டுப்பாடு
 • உணவுக் கட்டுப்பாடு
 • உடற்பயிற்சி
 • மாத்திரை மற்றும் இன்சுலின் ஊசி

கிருமிகள் தாக்கம் ஏற்படுதல்

அதிக நாட்களுக்கு கட்டுப்பாடற்ற சர்க்கரை இருப்பின், உடல் எதிர்ப்பு சக்தியை, இழக்கலாம். இதனால், பல்வேறு நோய்க் கிருமிகள், உடலை எளிதாக தாக்கக்கூடும்.

கிருமிகள் தாக்கும் பகுதிகளும், நோய்களும்
 • தோலில் பூஞ்சை, அரிப்பு, வெண் படை தோன்றுதல்
 • நுரையீரல் பாதிக்கப்பட்டு நிமோனியா, டி.பி., தொடர் இருமல் (3 வாரத்திற்கு மேல்), கபம் கட்டுதல், காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை
 • காலில் ஆறாத புண், எரிச்சல், வலி, வீக்கம்
 • பல்லில் ஈறுவீக்கம், அரிப்பு, இரத்தக் கசிவு, துர்நாற்றம்
 • பித்தப்பையை கிருமிகள் தாக்கி மஞ்சள் காமாலை, காய்ச்சல், வாந்தி. வயிறு, வலி ஏற்படுதல்
 • காதில் அரிப்பு, வலி, நீர் வடிதல்
 • இரத்தம் கெட்டு செப்டிசீமியா (Septicemia) தோன்றுதல்
 • பிறப்புறுப்பில் புண், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுதல்.
கிருமிகள் தாக்கம் ஏற்படக் காரணங்கள்:
 • இரத்தத்தில் எதிர்ப்பு சக்தி குறைதல்
 • காலில் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுதல்
 • நரம்புத் தளர்ச்சியடைதல்
 • நல்ல கொலஸ்ட்ரால் குறைவாக இருத்தல் (Low level of HDL)

சிகிச்சைகளும் தடுக்கும் முறைகளும்

 • முறையான மருத்துவப் பரிசோதனை
 • சர்க்கரை குறித்த விழிப்புணர்வு
 • மருந்துகள்
 • முழு ஓய்வு
 • ஆரோக்கிய உணவு

முடிவுரை

ஆகையல், சரியான கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தையும் நீங்கள் சமாளிக்க முடியும். உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்.