சர்க்கரை நோயால் ஏற்படும் கண் பிரச்சனைகள் மற்றும் அதன் அறிகுறிகளும் காரணங்களும்

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை கட்டுப்படுத்த இன்சுலின் உற்பத்தி செய்யும் அல்லது பயன்படுத்தும் உடலின் திறனில் ஏற்படும் ஒரு பாதிப்பு. நீரிழிவு நோய் இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இது பல்வேறு கண் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கண்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வலைப்பதிவில் நாம் பல்வேறு சர்க்கரை நோயால் ஏற்படும் கண் பிரச்சனைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் கண் பிரச்சனைகள்

நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி முன்னுள்ள வலைப்பதிவில் நாம் அறிந்திருப்போம் ஆனால் கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயால் பல கண் பிரச்சினைகள் ஏற்படலாம், அவற்றுள்:

சர்க்கரை நோய் ரெட்டினோபதி (Diabetic Retinopathy)

மிகவும் பொதுவான சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு என்றால் அது விழித்திரையில் (Retina) உள்ள இரத்த நாளங்கள் இரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரையினால் சேதப்படுத்துவதே. இது பார்வை சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கண் பார்வை இழப்பைக் கூட ஏற்படுத்தும்.

பெரும்பாலும், சர்க்கரை நோய் ரெட்டினோபதியின் ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆனால் இந்த நிலை மாறி அதிகமாகி, கண்களை நிரப்பும் ஜெல் போன்ற திரவம் உள்ள விழித்திரையில் இருக்கும் இரத்த நாளங்களில் இருந்து இரத்தம் கசிய தொடங்குகிறது. இது நடந்தால், உங்கள் பார்வையில் இருண்ட, மிதக்கும் புள்ளிகள் மற்றும் கோடுகள் தெரியும், அப்படியே பார்வை மங்கவும் தொடங்கும்.

சர்க்கரை நோய் மாக்குலர் எடிமா (Diabetic Macular Edema (DME)

மாக்குலா என்பது விழித்திரையின் ஒரு பகுதியாகும். இது கூர்மையான விவரங்கள், தொலைதூரத்துல் இருக்கும் பொருட்கள் மற்றும் வண்ணங்களைக் காண உதவுகிறது.

சர்க்கரை நோயினால் ஏற்படும் உயர் இரத்த சர்க்கரை அளவுகள், மாக் குலாவில் இரத்த நாளங்களில் கசிவை ஏற்படுத்துகிறது.  மாக் குலாவில் அசாதாரணமான திரவம் உருவாகின்ற போது மாக்குலாவில் நீர் கோர்த்து வீக்கமடையும். ஏற்கனவே சர்க்கரை நோய் ரெட்டினோபதியின் அறிகுறிகள் வெளிப்படுத்தும் நபர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனுடைய அறிகுறிகளாக மங்கலான, அலை அலையான மையப் பார்வை, வண்ணங்கள் வித்தியாசமாகத் தெரியலாம், மேலும் எதையும் படிப்பதற்கு சிரமம் ஏற்படலாம்.

கண்புரை (Cataracts)

சர்க்கரை நோயாளிகள் கண்புரை உருவாவதில் அதிக ஆபத்தில் உள்ளனர். இது கண்களின் லென்ஸை மங்கச் செய்து பார்வை மங்கலுக்கு வழிவகுக்கும்.

வயதாகும்போது, கண்புரை வருவது மிகவும் பொதுவானது. இருப்பினும், சர்க்கரை நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை விரைவாக குறைந்த வயதிலேயே வரும் வாய்ப்புகள் அதிகம்.

கண் அழுத்த நோய் (Glaucoma)

சர்க்கரை நோயானது கண் அழுத்த நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவால் பார்வை நரம்பு சேதமாகி பார்வை இழப்பு நிலையை ஏற்படுத்தும்.

விழித்திரை விலகல் (Retinal Detachment)

விழித்திரையானது கண்ணின் உட்சுவரிலிருந்து உரிவதால் இது ஏற்படுகிறது. அசாதாரணமான இரத்த நாளங்களால் இந்த நிலை ஏற்பட்டு கடுமையான பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.

கண் பார்வை இழப்பு (Blindness)

சர்க்கரை நோயால் ஏற்படும் கண் சிக்கல்களை நிர்வகிக்காமல் விட்டுவிட்டால், அவை இறுதியில் பகுதி அல்லது முழுமையான கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

இந்த கண் பிரச்சனைகள் வருவதற்கான அதிக ஆபத்துயாருக்கு உள்ளது?

  • நீண்ட காலமாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு
  • உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு
  • கர்ப்பமாக இருப்பவர்களுக்கு
  • அதிக கொலஸ்ட்ரால் அளவு இருப்பவர்களுக்க
  • மேலும், புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு

இந்த கண் பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்வது?

சர்க்கரை நோயாளிகளிடையே கண் பராமரிப்புக்கான ஒரு முக்கியமான உதவிக்குறிப்பு, உங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.கண் நிபுணருடன் ஆலோசனை மற்றும் வழக்கமான பரிசோதனைகள் முக்கியமாகும்.

இறுதிச்சுருக்கம்

சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களின் கண் ஆரோக்கியத்தை தவறாமல் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் பார்வை பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.