சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? அப்படியானால், எந்த மீன்களை உண்ணலாம்?

சத்தான உணவு அனைவருக்கும் அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மேலும் அதிகமாக தேவைப்படுகிறது. சரியான உணவுகளை உண்பது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். ஏனெனில், உங்களின் ஒரு சிறிய அலட்சியம் கூட உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே எவ்வகையான உணவை சாப்பிடுதல் நல்லது என தெரிந்துகொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? இந்த கேள்வி பலருக்கு உள்ளது. இதற்கான பதிலை இந்த வலைப்பதிவு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? அப்படியானால், எந்த மீன்களை உண்ணலாம்?

சர்க்கரை நோயாளிகளுக்கு மீன் நல்லதா?

மீன் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதில் அதிக புரத உள்ளடக்கம் மற்றும் கொழுப்புகள் உள்ளது.எனவே, மீன் உணவைப் சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. இருப்பினும் மருத்துவர் ஆலோசனையுடன் மிதமான அளவில் உண்பதே நல்லது.

சர்க்கரை நோயாளிகள் பின்வரும் மீன்களை உண்ணலாம்:

மத்தி மீன்கள் (Sardines)

இந்த மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. மேலும், பாதரசம் (Mercury) அளவு இதில் குறைவாக இருப்பதால், மத்தி ஒரு நல்ல தேர்வாகும்.

கானாங்கெளுத்தி (Mackerel)

ஒமேகா -3 கொண்ட மற்றொரு கொழுப்பு மீன் கானாங்கெளுத்தி ஆகும். வேகவைத்து சமைக்கப்பட்ட கானாங்கெளுத்தி ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாக அமைகிறது.

இறால்கள் (Prawns)

இவை குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக புரதம் கொண்ட மீன் வகை. இறால்களை அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை இல்லாமல் சமைத்து சாப்பிடும் போது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

வெள்ளை வவ்வால் மீன் (Pomfret)

ஒல்லியான மீன் வகையை சேர்ந்த வெள்ளை வவ்வால் மீன் அதிக அளவு புரதம் கொண்டிருக்கிறது. இதை கொழுப்பு சேர்க்காமல் ஆரோகியமாக சமைத்து உண்ணலாம்.

கெளுத்தி மீன் (Cat Fish)

கெளுத்தி மீன் குறைந்த கொழுப்புள்ள மீன் ஆகும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்படும் போது சர்க்கரை நோய்க்கு ஏற்றது.

மீன்களின் கலோரி மதிப்பீடு

சில பொதுவான வகை மீன்களின் 100-கிராம் அளவு பகுதியின் தோராயமான கலோரி மதிப்பீடு இங்கே:

  • மத்தி மீன்கள்: 208 கலோரிகள்
  • வெள்ளை வவ்வால் மீன்: 97 கலோரிகள்
  • கெளுத்தி மீன்: 95 கலோரிகள்
  • இறால்கள்:  99 கலோரிகள்
  • கானாங்கெளுத்தி: 205 கலோரிகள்

மீனின் வகை மற்றும் சமையல் முறையைப் பொறுத்து அதன் கலோரி எண்ணிக்கை மாறுபடும்.

மீன் உண்ண சரியான முறை

மீனை குழம்பு செய்து உண்ணலாம். இது பெரும்பாலும் புளி, பூண்டு மற்றும் இஞ்சி போன்ற ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பின் அளவைக் குறைக்க வறுத்த மீன் உணவுக்கு பதிலாக வேகவைத்து உண்பதே நல்லது. மேலும், சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவை கவனத்தில் கொள்ளுங்கள்.

எவ்வளவு மீன் சாப்பிடலாம்?

  • வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடலாம்.
  • ஒரு முறைக்கு 85 முதல் 170 கிராம் வரை சேர்த்துக்கொள்ளலாம்.
  • இருப்பினும் உங்களுக்கு ஏற்ற தனிப்பட்ட பரிந்துரைகளுக்கு நீரிழிவு வல்லுனருடன் கலந்தாலோசிக்கவும்.
  • இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து, அதற்கேற்ப மீன் உட்கொள்ளுங்கள்.
  • கூடுதல் இதய ஆரோக்கிய நன்மைகளுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களைத் தேர்வு செய்யுங்கள்.

இறுதிச்சுருக்கம்

இதன் விளைவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு மீன் நல்லதா? என்ற கேள்விக்கான பதிலை தெரிந்துகொண்டிருப்பீர்கள். மேலும், மீன்  அதன் அதிக புரத உள்ளடக்கம் காரணமாக ஆரோக்கியமான உணவுத் தேர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் அதை மிதமாக உட்கொண்டு ஆரோகியமான இருங்கள்.