சர்க்கரை நோய் தலைச்சுற்றலை ஏற்படுத்துமா? சர்க்கரை நோய் நமது உடலில் பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். அவற்றில் தலைச்சுற்றழும் ஒன்றாகும். சமீப காலமாக, பலர் தலைசுற்றல் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றனர். தலைசுற்றல் என்றாலே நீங்கள் பயப்படுவது இயல்புதான். இதனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள அதனால் ஏற்படும் பல பொதுவான அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வலைப்பதிவில், சர்க்கரை நோயால் ஏற்படும் தலைசுற்றலின் அடிப்படை காரணங்கள் மற்றும் அதனை சமாளிக்க நம் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோய் தலைச்சுற்றலை ஏற்படுத்துவதற்கான பொதுவான காரணங்கள்
சர்க்கரை நோயினால் தலைசுற்றல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவை:
1. ஹைபோகிளைசீமியா – Hypoglycemia (குறைந்த இரத்தச் சர்க்கரை)
நாம் உண்ணும் மாவுச்சத்து மற்றும் செய்யும் உடற்பயிற்சியுடன் ஒப்பிடும்போது தேவையானதை விட அதிக இன்சுலின் உடலால் எடுக்கப்படும் போது இந்நிலை ஏற்படுகிறது. இந்த ஆபத்தான நிலையை சமாளிக்க, உணவை சிறு சிறு அளவாக, அடிக்கடி சாப்பிட வேண்டும். மேலும், இரத்த சர்க்கரை அளவையும் சரியாக கண்காணிக்க வேண்டும்.
2. ஹைப்பர்கிளைசீமியா – Hyperglycemia (அதிக இரத்த சர்க்கரை)
இது நீங்கள் சிறுநீர் கழிக்கும் அளவை அதிகரிப்பதன் மூலம் தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது மற்றும் உடலில் நீர் இழப்புக்கும் வழிவகுக்கிறது. இருப்பினும், சரியான மருந்துகளைப் பின்பற்றுதல் மற்றும் உணவு மேலாண்மை மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.
3. உடலில் நீரின் அளவு குறைவது
4. நீரிழிவு நரம்பியல் பாதிப்பு – Diabetic Neuropathy
மேலும், சரியான சிகிச்சையைப் பெறுவதற்கு இது ஏன் நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
பிற அடிப்படைக் காரணங்கள்
• தானியங்கி நரம்பு பாதிப்பு(Autonomic neuropathy)
சர்க்கரை நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இதனால், உடல் அழுத்தக்குறை (ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்) ஏற்பட்டு ஒருவர் எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது.
•இருதய நோய்
சர்க்கரை நோய் இருதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீண்ட காலம் சர்க்கரை நோயினால் இருதயம் வலுவிழந்து இயங்கும்போது(heart failure) மூலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் இது தலைச்சுற்றலுக்கு வழிவகுக்கும். இதனை நிர்வகிக்க வழக்கமான பரிசோதனைகள் முக்கியம்.
•சிறுநீரக நோய்
சர்க்கரை நோய் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பாதிக்கும் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். குறிப்பாக இது குறிப்பிடத்தக்க கிட்னி செயலிழப்பை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய் ஏற்படுத்தும் தலைசுற்றலைத் தடுக்க முன்னெச்சரிக்கைகள்
பொதுவாக, உங்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டால், கீழே அப்படியே விழுவதைத் தடுக்க உடனடியாக உட்காரவோ அல்லது படுக்கவோ செய்யுங்கள். பிறகு, சிறிது நேரத்திற்க்கு பின் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில் இருந்து மெதுவாக எழுந்திருங்கள். குறைந்த இரத்த சர்க்கரை அளவைச் சமாளிக்க எப்போதும் குளுக்கோஸ் மாத்திரைகள் அல்லது சிற்றுண்டிகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
தலைச்சுற்றலை நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
- தலைச்சுற்றலை நிர்வகிப்பதற்கு இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
- திட்டமிட்டு சரிவிகித உணவை உண்ணுங்கள்.
- குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ள உணவை உண்ணுங்கள்.
- நிறைய தண்ணீர் குடித்து உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- குறைந்த இரத்த சர்க்கரை அளவை தவிர்க்க சிறு அளவிலான உணவை, அடிக்கடி உண்ணுங்கள்.
- வழக்கமான கால் பராமரிப்புக்களை மேற்கொள்ளுங்கள்.
- மிதமான உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபடுங்கள்.
- பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரியுங்கள்.
- பரிந்துரைக்கப்பட்டபடி உங்கள் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்
- உங்களின் நீரிழுவு மருத்துவருடன் வழக்கமான சந்திப்புகளை மேற்கொண்டு பரிசோதனைகள் பெறுங்கள்.
- திறம்பட மன அழுத்தத்தை சமாளிக்க யோகா மற்றும் தியானப் பயிற்சி செய்யுங்கள்.
- குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளுக்கு உடனடி நிவாரணம் பெற குளுக்கோஸ் மாத்திரைகள் அல்லது விரைவாக செயல்படக்கூடிய மாவுச்சத்துள்ள உணவுகளை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லுங்கள்.
- வீட்டில் தலைசுற்றலால் கீழே விழும் அபாயங்களைக் குறைக்க தளர்வான தரைவிரிப்புகளை அகற்றிவிடுங்கள். வீட்டிற்குள் நல்ல வெளிச்சம் வருவதை உறுதிப்படுத்துங்கள்.
உங்கள் மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்
மேற்கண்ட அனைத்து ஆரோக்கிய முயற்சிகளையும் மேற்கொண்ட பின்பும், உங்களுக்கு நெஞ்சு வலி, தலைவலி, மூச்சுத் திணறல், சீரற்ற இதயத் துடிப்பு அல்லது சுயநினைவு இழப்பு ஆகியவற்றுடன் திடீர், கடுமையான தலைசுற்றல் ஏற்பட்டால்; மேலும், மந்தமான பேச்சு, பார்வை மாற்றங்கள், பலவீனம் அல்லது உணர்வின்மை ஆகியவற்றுடன் தலைச்சுற்றல் வந்தால், பக்கவாதம் போன்ற தீவிரமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
இறுதிச்சுருக்கம்
சர்க்கரை நோயால் ஏற்படும் தலைசுற்றலுக்கான காரணங்கள் மிகவும் பொதுவானவை. மேலும், சில வாழ்க்கை முறை மாற்றங்களால் இவற்றை எளிதில் குணப்படுத்த முடியும். அதன்பிறகு, உங்கள் சர்க்கரை நோய் திட்டத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளும் முன் உங்கள் நீரிழிவு மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும். மேலும், வழக்கமான சோதனைகளை மேற்கொள்வது அவசியம், இதனால் மருத்துவர் உங்கள் நிலையை திறம்பட கண்காணித்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பார்.