நாம் இப்போது கோடை பருவத்தின் உச்சத்தில் இருக்கிறோம். இந்த சமயத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை என்றால் உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படலாம். உடல்நலத்தை பராமரிக்க, நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். அதீத நீரிழப்பு ஏற்பட்டால் சோர்வு, அதிக வியர்வை, தாகம், மயக்கம் மற்றும் சிக்கலான உடல் நல பிரச்சனைகளாகவும் மாறக்கூடும். மேலும் ஏற்கனவே நீரிழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கர்களுக்கு பெரிய ஆபத்தாகலாம். ஆனால் கவலை வேண்டாம்! கோடைகாலத்தில் இயற்கையாக நீரிழப்பை தவிர்க்கும் வழிகள் குறித்து இந்த வலைப்பதிவில் தெளிவாகப் பார்க்கலாம் வாங்க.
நீரிழப்பைத் தடுப்பது எப்படி?
1. அதிக தண்ணீர் குடிக்கவும்
நீரேற்றமாக இருக்க தண்ணீர் குடிப்பது மிக எளிமையான வழி. தினமும் குறைந்தது 8 முதல் 10 குவளை தண்ணீர் குடிப்பது முக்கியம். நீங்கள் அதிகமாக வியர்வை சித்தனால் அல்லது உடற்பயிற்சி செய்தாலும், கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான அளவில் தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.
வெறும் தண்ணீரைக் குடிக்க மலைப்பாக இருந்தால் அதில் எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய், புதினா, இலவங்கப்பட்டை அல்லது சீரகம் போன்ற பொருட்களைச் சேர்த்து குடிக்கலாம்.
2. நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் தண்ணீரைக் கொண்டிருப்பதால், நீரேற்றத்துக்கு உதவுகின்றன. மேலும், அவை முக்கிய ஊட்டச்சத்துகளையும் வழங்குவதால், உடல்நலத்திற்கும் பேருதவியாக இருக்கின்றன.
- தர்பூசணி (Watermelon):
தர்பூசணி சுமார் 90% முதல் 92% வரை தண்ணீரையே கொண்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் அதிகம் பரிந்துரைக்கப்படும் பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் A, C மற்றும் லைகோபீன் (licopene) என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்களும் உள்ளன.
இது உடலுக்கு ஆரோக்கியமானதுஎன்றாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே உண்ண வேண்டும், ஏனெனில் இதில் இயற்கையான சர்க்கரை உள்ளது.
- வெள்ளரிக்காய் (Cucumber):
96% தண்ணீர் கொண்ட வெள்ளரிக்காய். இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால், சிறந்த ஸ்னாக்ஸ்சாக அனைவரும் உண்ணலாம்.
- ஆரஞ்சு மற்றும் பெர்ரிகள் (Oranges & Berries):
இவை இரண்டும் தண்ணீர் மற்றும் வைட்டமின் C-யில் மிகுந்துள்ளன. நீரிழப்பைத் தவிர்க்கவும், நோய்த்தடுப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும். சர்க்கரை நோயாளிகள் உங்களின் மருத்துவர் ஆலோசனைப்படி சிறிய கைப்பிடிஅளவு பெர்ரிகள் அல்லது அரை ஆரஞ்சு மட்டுமே சாப்பிடலாம்.
- இளநீர் (Tender Coconut Water):
இது இயற்கையான எலக்ட்ரோலைட்கள் மிகுந்த ஒன்று. உடனடி நீரேற்றம் பெற இதனை பருகலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பில்லாத (unsweetened) இயற்கை வகையினைத் தேர்வுசெய்து, உங்கள் மருத்துவர் அறிவுரைப்படி தினமும் அரை கப் வரை பருகலாம்.

3. இனிப்பு மற்றும் கஃபீன் கலந்த பானங்களைத் தவிர்க்கவும்
இனிப்பு கலந்த சோடா, எனர்ஜி டிரிங்க்ஸ் போன்றவை உடலுக்கு குளிர்ச்சியாக தோன்றலாம். ஆனால், இவை அதிகமாக நீரிழப்பு ஏற்படச் செய்யும். இதில் உள்ள சர்க்கரை, இரத்தச் சர்க்கரையை உயர்த்தி, நீரிழப்பை அதிகரிக்கச் செய்யும். கஃபீன் (Caffeine) உடலிலிருந்து அதிகமாக திரவங்களை வெளியேற்றும் டியூரெடிக் குணம் கொண்டதால், கூடுதல் நீரிழப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றுக்கு மாற்றாக, தண்ணீர் மற்றும் புதினா, எலுமிச்சை, இன்ஜி, சீரகம் போன்றவை கலந்த மூலிகை தேநீர் (herbal tea) போன்ற இயற்கை பானங்களை குடிக்கலாம்.
4. சிறிய அளவில், அடிக்கடி உண்ணுங்கள்
கோடை வெப்பம் உங்கள் பசியை குறைத்துவிடும், அதனால் ஒரே சமயத்தில் பெரிதாகச் சாப்பிடுவது கடினமாகலாம். எனவே சிறிய அளவில் நாள் முழுவதும் உணவுகளை பிரித்து உண்பது, உங்கள் சக்தி மற்றும் நீரேற்ற நிலையைப் பராமரிக்க உதவும். மேலும், இந்த ஒவ்வொரு உணவு பகுதியிலும் நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க முயலுங்கள்.
5. எலக்ட்ரோலைட் நிறைந்த திரவங்களைச் சேர்க்கவும்
எலக்ட்ரோலைட்கள் (Electrolytes) எனப்படும் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாது உப்புகள், உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. நாம் வியர்க்கும் போது, இத்தகைய எலக்ட்ரோலைட்கள் உடலில் இருந்து வெளியேறும். எனவே, அவற்றை மீண்டும் சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது.
- இளநீர்: இயற்கையான எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது.
- இயற்கை பழச்சாறு: சர்க்கரை குறைவாக உள்ளதை தேர்வு செய்யவும்.
அதிக சர்க்கரை உள்ள பானங்கள் இரத்தச் சர்க்கரையை உயர்த்தக்கூடும், எனவே சர்க்கரை குறைவான வகைகளை மட்டுமே தேர்வு செய்யுங்கள்.
நீரிழப்பின் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
சில நேரங்களில், எல்லா முன் எச்சரிக்கைகளையும் எடுத்திருந்தாலும் உங்கள் உடல் நீரிழப்புக்கு உள்ளாகலாம்.
உடலில் நீரிழப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இதோ:
- வாய் உலர்வு
- சோர்வு (தடுமாற்றம்)
- தலைசுற்றல் அல்லது குழப்பம்
- இருண்ட நிறமுள்ள சிறுநீர்
- தலைவலி
இவ்வாறான அறிகுறிகள் தோன்றும் போது, உடனடியாக:
- அதிகமாக தண்ணீர் குடிக்கவும்
- அல்லது எலக்ட்ரோலைட் நிறைந்த பானம் குடிக்கவும்
உடனடியாக செயல்படுவது, நீரிழப்பை மோசமான நிலைக்கு செல்லாமல் தடுக்கும்.
முடிவுரை
நீரிழப்பை இயற்கையாகத் தவிர்ப்பது எளிதானது. ஏனெனில் தண்ணீர், நீர்ச்சத்து அதிகமான உணவுகள் மற்றும் எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்கள் மூலம் எளிதாக நீரேற்றம் அடையாளம். பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுத் தேர்வுகள் மூலம் கோடை காலம் முழுவதும் நீங்கள் நீர்ச்சத்து நிறைந்த நிலையிலும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். மேலும், சர்க்கரை நோயாளிகள் குறைந்த சர்க்கரை கொண்ட, நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தேர்வு செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்கலாம்.
EDF மற்றும் MMCH இணைந்து, சர்க்கரை நோய் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் கோடையில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், அவர்களுக்கு வழிகாட்டல், ஆரம்ப பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்கி வருகிறோம். எனவே இன்றே எங்களை தொடர்பு கொண்டு சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுங்கள்.