சர்க்கரை நோயின் விளைவுகள் – பல் பாதிப்புகள்

இன்று, பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயின் பின்விளைவுகள் பல உள்ளது, ஆனால் அவை முறையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் மட்டுமே ஏற்படும்.

சர்க்கரை நோய் உங்கள் பற்களை சேதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது போன்ற பல சுவாரசியமான மற்றும் பயனுள்ள விஷயங்களை இந்த வலைப்பதிவில் பார்க்கலாம்

சர்க்கரை நோயின் விளைவுகள்:

பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு சர்க்கரை நோயின் மற்ற சிக்கல்களில் ஒன்றாகும். அதைப் பற்றி மேலும் பார்ப்போம்

1. பல் பாதிப்புகள்:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் வாய் மற்றும் பற்களில் உள்ள கிருமிகள் எளிதாக நம் உடலைப் பாதிக்கின்றன.

ஜின்ஜிவைட்டிஸ் (GINGIVITIS)

பற்களின் ஈறுகளில் டார்டார் எனும் படலம் படர்ந்து ஜின்ஜிவைட்டிஸ் (GINGIVITIS) என்றழைக்கப்படும் ஈறு நோயை உண்டாக்கும்.

கவனம் செலுத்தாமல் இருந்தால்,

  • ஈறுகளில் இரத்தம் கசிதல்
  • பற்களில் வலி
  • ஈறுகளில் வீக்கம்
  • வாய் துர்நாற்றம்
  • பல் அசைதல் போன்ற பல்வேறு பிரச்னைகள வருமுன் காப்போம்

பற்கறையும் ஈறுகளையும் 6 -12 மாதத்திற்கு ஒரு முறை ஸ்கேலிங் எனப்படும் முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

செயற்கைப் பற்களின் அவசியம்

இயற்கைப் பற்கள் இல்லாத இடங்களில், செயற்கைப் பற்களைப் பொறுத்துவது அவசியம். இல்லையெனில் காலப் போக்கில் அந்த வெற்றிடத்திற்கு அருகாமையிலுள்ள பற்கள் வலுவிழந்து சாய்ந்து விடும்.

சொத்தைப் பற்களை பிடுங்கலாமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் நிபுணரின் ஆலோசனை இல்லாமல் பற்களைப் பிடுங்கக் கூடாது.

மாற்று முறை : ஆரம்ப நிலையில் வலி தோன்றும் போதே வேர் சிகிச்சை மூலம் வலி ஏற்பட்ட பற்களை பிடுங்காமல் சரி செய்ய வாய்ப்புகள் உள்ளன.

வாய் வறட்சி

தேவையான அளவு தண்ணீர் மற்றும் நீர் சத்துள்ள உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் (ஜூஸ், சூப் வகைகள்) வாய் வறட்சியை தவிர்க்கலாம். சர்க்கரை சேர்க்காத சூயிங் கம் மெல்லலாம்.

2. தாழ்நிலை சர்க்கரை (Hypoglycemia):

தாழ்நிலை சர்க்கரை, அதிக சர்க்கரையைப் போலவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு 72 மி.கி.க்கு கீழ் குறைந்தால் ஏற்படும் நிலையே தாழ்நிலை சர்க்கரை (Low sugar or Hypoglycemia) எனப்படும்.

தாழ்நிலை சர்க்கரையின் அறிகுறிகள்

  • படபடப்பு
  • மயக்கம்
  • அதிக வியர்வை
  • நடுக்கம்
  • உடல் சில்லென்று குளிர்ச்சியடைதல்
  • பார்வை மங்குதல்
  • சில சமயங்களில் நினைவிழத்தல் (Coma)

இறுதிச் சுருக்கம்:

ஆகையால், சர்க்கரை நோயின் விளைவுகள் பல இருந்தாலும், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றினால், அதை எளிதாக சமாளிக்க முடியும். மேலும், எந்தவொரு சர்க்கரை நோயாளியின் முக்கிய நோக்கமும் உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.