உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், சிக்கல்களைத் தடுக்க பல்வேறு பரிசோதனைகளைச் செய்வது நல்லது. பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், சரியான சிகிச்சைக்கு உதவும் பிரச்சனைக்கான காரணத்தை நீங்கள் அடையாளம் காணலாம். இந்த வலைப்பதிவு மூலம் சர்க்கரை நோய்க்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள் பற்றி தெளிவாக பார்ப்போம்.
முறையான மருத்துவப் பரிசோதனைகள்:
உங்கள் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி கீழ்க்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் நல்ல பயனளிக்கும்.
தினந்தோறும் செய்ய வேண்டிய பரிசோதனை :
வீட்டில் கால் மற்றும் பாத பரிசோதனை – (Foot checkup at home)
உங்கள் பாதத்தில் ஏதேனும் விரிசல், காயம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய உங்கள் பாதத்தை கண்ணாடி மூலம் தினமும் சரிபார்க்கவும்.
மாதம் ஒரு முறை செய்ய வேண்டிய பரிசோதனைகள்
- இரத்த சர்க்கரை (Blood sugar)
- இரத்த அழுத்தம் (BP)
- உடல் எடை (Weight)
- மருத்துவ ஆலோசனை
- உணவியல் நிபுணரின் ஆலோசனை
மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய -வண்டிய பரிசோதனைகள்
- Hb1Ac பரிசோதனை இரத்தத்தில் 3 மாத சர்க்கரையின் சராசரி அளவு
- இரத்தத்தில் யூரியா (Urea), கிரியாட்டினைன் (Creatinine) பரிசோதனை
ஆண்டிற்கு ஒரு முறை செய்ய வேண்டிய பரிசோதனைகள்
- முழு உடல் பரிசோதனை(Master health checkup)
- கண் பரிசோதனை(Eye test)
- சிறுநீரகச் செயல்திறன் பரிசோதனை (Kidney function test)
- இரத்தத்தில் கொழுப்புச் சத்து அளவு பரிசோதனை (Lipid profile)
- சர்க்கரை பரிசோதனை (Diabetic test)
- கால் மற்றும் பாத பரிசோதனை (Foot Care test)
- ஈ.சி.ஜி (ECG) இருதய வரைபடம்
- எக்ஸ்-ரே(X-Ray)
- எக்கோ ஸ்கேன்(Echo scan)
- பற்கள் பரிசோதனை(Dental check up)
- சிறப்பு உள்நரம்பு பரிசோதனை (CAN test)
- டி. எம். டி. (Tread Mill Test or TMT)
சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு
சர்க்கரை நோய் குறித்த கூட்டங்கள், கருத்தரங்குகள், நாளிதழ்கள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் சர்க்கரை நோய் குறித்த அனைத்து விளக்கங்களையும், தடுக்கும் முறைகளையும் அறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள இயலும்.
இறுதிச் சுருக்கம்:
எனவே, இந்த நிலையை இன்னும் திறம்பட நிர்வகிக்க, சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை நோய்க்கு செய்யக்கூடிய பரிசோதனைகளை முறையாக செய்து சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப கட்டத்தில் கண்டு எதிர் கொள்வோம்.
“வரும் முன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க பலவிதமான பரிசோதனைகளைப் பயன்படுத்துவோம்.