சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகள்

நீங்கள் அன்றாடம் சந்திக்கும் கிட்டத்தட்ட பாதி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது பொதுவானது. நீங்கள் அல்லது நீங்கள் விரும்பும் ஒருவருக்கு இந்த மருத்துவ நிலை இருந்தால், கவலைப்பட வேண்டாம். எளிதில் எதிர்கொள்ள முடியும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளின் பயன்கள் மற்றும் அதன் அவசியத்தை இந்த வலைப்பதிவில் பாக்கலாம்.

சர்க்கரைநோய் கட்டுப்படுத்த உதவும் மாத்திரை

நீங்கள் மாத்திரை உட்கொள்பவராயின் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்:

  • மாத்திரை உட்கொள்பவர்கள், மாத்திரை வாங்கியவுடன் அதை சரிபார்த்து உட்கொள்ள வேண்டும் (சரியான மாத்திரைதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்).
  • தினமும் குறித்த நேரத்தில் மாத்திரையும், உணவும் உட்கொள்ள வேண்டும்.
  • சில மாத்திரை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு (30 நிமிடம்) முன்பும், சில உணவுக்கு பின்பும், மற்றும் சில உணவுடன் சேர்த்தும் உட்கொள்ள வேண்டும்.
  • எனவே மருத்துவரின் பரிந்துரைப்படி, குறிப்பிட்டுள்ள நேரங்களில் மாத்திரைகளை உட்கொள்வது நோய் கட்டுப்பாட்டிற்கு உதவும்.
  • நீங்கள் உட்கொள்ளும் மாத்திரை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் ஏதேனும் மாற்றங்கள் (Side effects) ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும், அல்லது மருத்துவரை சந்திக்கும் பொழுது மறக்காமல் கூறவும் மாத்திரைகளை மாற்றி கொடுக்க இது உதவியாக இருக்கும்.
  • தீவிர இருதயப் பாதிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு இருப்பின் அதற்குரிய மாற்றங்களை மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே தொடர்ந்து மாத்திரை உட்கொள்வதை நிறுத்த வேண்டாம்.
  • குறைந்தது 2 வாரத்திற்குரிய மாத்திரைகளை எப்பொழுதும் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு- மருத்துவர் அறிவுரையின்றி, நீங்களாக உணவுக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது.

இன்சுலின் ஊசி (Insulin injection) :

நம் உடலில் இன்சுலின் சுரப்பில் மாற்றம் அல்லது பாதிப்பு (நோயின் பாதிப்புகள்) ஏற்படுவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

முதலாம் வகை (Type-I)
  • சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பது மிக மிகக் குறைவாக இருக்கும் அல்லது இன்சுலின் சுரப்பதில்லை.
  • எனவே, இவர்களுக்கு உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையைப் (குளுக்கோஸ்) பயன்படுத்தப்படுவதற்கு இன்சுலின் ஊசி போடுதல் மிக அவசியம்.
இரண்டாம் வகை (Type-II)
  • சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் குறைந்த அளவே சுரக்கிறது.
  • இவர்களுக்கு சர்க்கரை நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பினும், உணவுக் கட்டுப்பாட்டுடன் உள்ளபோது மாத்திரை நன்கு பலன் தருகின்றன.
  • 5-10 வருட இரண்டாம் வகை (Type-II) சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகமாகும் பொழுது, இன்சுலின் (Insulin) சுரப்பு மிகவும் குறைகிறது.
சி-பெப்டைடு (Insulin C-peptide)
  • இவர்களுக்கு சி-பெப்டைடு (Insulin C-peptide) பரிசோதனை மற்றும் இரத்தத்தில் இன்சுலின் அளவு (Insulin measurement) பரிசோதனை போன்றவை செய்யும் பொழுது, இன்சுலின் குறைபாட்டைக் கண்டறிந்து இன்சுலின் ஊசி (Insulin injection) மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்த முயலும்.

இது தவிர Hb1Ac எனப்படும் 3 மாத சராசரி சர்க்கரை அளவு 7.5 விழுக்காட்டிற்கு மேல் இருப்பின், இவர்கள் சிறிது காலம் இன்சுலின் ஊசி (Insulin injection) போட்டுக் கொள்வது அவசியம். இதனால் சர்க்கரை நோய் நன்கு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

அதன் பிறகு, மருத்துவர் அறிவுறுத்தினால், இன்சுலினிற்குப் பதிலாக மாத்திரைகளை கொள்ளலாம்.

இறுதிச் சுருக்கம்:

எனவே, முறையான மருத்துவ கவனிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இந்த நிலையை நீங்கள் சமாளிக்க முடியும். ஆகையால் , இந்த நிலையை கட்டுப்படுத்த உதவும் மாத்திரை மற்றும் ஊசி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை படி உட்கொண்டு சர்க்கரை நோயை எதிர்கொள்வோம்.