சர்க்கரை நோயாளிகள் சரியான உணவைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் நீங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சர்க்கரை நோய்க்கான உணவு என்பது ஒவ்வொரு சர்க்கரை நோயாளிகளும் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஒரு மந்திர கோல்.
இந்த வலைப்பதிவு மூலம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் மற்றும் அவற்றின் கலோரி மதிப்புகளை பார்ப்போம். மேலும், உடற்பயிற்சியால் ஏற்படும் பயன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்
சர்க்கரைநோயாளிகள்சாப்பிடவேண்டியஉணவுவகைகள்
நாள் ஒன்றுக்கு தேவையான உணவு வகைகளும் அவற்றின் கலோரி மதிப்புகளும்
உணவு வகைகள் | தானியங்கள் | பயிறு வகைகள் | பால் வகைகள் | காய்கறிகள் | கீரைகள் | கிழங்குகள் | பழங்கள் | சர்க்கரை | எண்ணெய் கொழுப்பு | மாமிச உணவுகள் |
ஒரு பரிமாற்ற அளவு (கிராமில்) | 30 | 30 | 100 மிலி | 100 | 100 | 100 | 100 | 5 | 5 | 50 |
சத்து அளவு (கலோரியில்) | 100 | 100 | 70 | 30 | 45 | 80 | 40 | 20 | 45 | 150 |
சர்க்கரை நோய் இல்லாதவர்க்கு தேவையான பரிமாற்ற அளவு (எண்ணிக்கையில்) | 14 | 2 | 3 | 1 | 1 | 2 | 1 | 5 | 4 | பயறு வகைக்கு மாற்றாக |
சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான பரிமாற்ற அளவு (எண்ணிக்கையில்) | 8 | 3 | 2 | 2-3 | 2-3 | 1 | 1 | – | 2-3 | பயறு வகைக்கு மாற்றாக |
குறிப்பு : சர்க்கரை நோயாளிகள், கிழங்குகளை உணவில் சேர்க்கும் போது தானியங்களை ஒரு பரிமாற்ற அளவு குறைத்து எடுக்கவும். பயிறு வகைக்கு மாற்றாக மாமிச உணவு எடுக்கும் பொழுது 2 பரிமாற்ற அளவு (100 கிராம்) கொழுப்பு நீக்கியதாக எடுக்கவும்.
உணவு அளவு கணக்கிடும் முறை
- தானியங்கள் ஒரு பரிமாற்ற அளவு என்பது =30 கிராம்.
- சர்க்கரை நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு தேவையான பரிமாற்ற அளவு=8, (எனவே = 8×30=240)
- சர்க்கரை நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு தேவையான தானியங்கள் = 240 கிராம்
- இதே போல் மற்ற வகை உணவுகளின் அளவுகளைக் கணக்கிடவும்.
உடற்பயிற்சியால் ஏற்படும் பயன்கள்
- உடற்பயிற்சி செய்யும்போது உடலில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்கப்பட்டு, உடலையும் மனதையும் அமைதிப் படுத்துகிறது.
- தசைகள் தளர்வு நிலையை அடைந்து மன அழுத்தம் (Depression) குறைகிறது.
- அமைதியான தூக்கம் வருகிறது.
- சுறுசுறுப்பு, எலும்பின் உறுதி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- சுயமரியாதை (Self-respect), தன்னம்பிக்கை (Self-confidence) அதிகரிக்கிறது.
- ஜீரண மண்டலம் நன்கு வேலை செய்கிறது.
- உடற்தோற்றம் பொலிவடைகிறது.
- முதுமை தோற்றம் ஏற்படுவதை குறைக்கிறது.
- தசைகளின் வலிகள் நீங்குகிறது.
- மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
- நுரையீரலின் சக்தி அதிகரிக்கிறது.
- சர்க்கரைக் கட்டுப்பாடு, இரத்த அழுத்தக் கட்டுப்பாடு (BP control) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ரால் (HDL cholesterol) அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.
மொத்தத்தில்
எனவே, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் மற்றும் அவற்றின் கலோரி மதிப்புகளை அறிந்து சர்க்கரைநோயை கட்டுப்படுத்துவோம். ஆகையால், நோய் வந்தபின் குறைப்பதை விட வருமுன் காத்தல் நலம்.